Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer
படைப்புகள் அனைத்தின்மீதும் நீர் அன்புகூர்கிறீர். நீர் படைத்த எதையும் வெறுப்பதில்லை. ஏனெனில் நீர் எதையாவது வெறுத்திருந்தால் அதைப் படைத்திருக்கவே மாட்டீர்! - சாலமோனின் ஞானம் 11:23. ஆண்டவர் உலகிலுள்ள அனைத்தையும் படைக்கும் போது மிக நேர்த்தியாக பார்த்து பார்த்து படைகின்றார். அவர் எல்லாவற்றையும் அன்பு செய்கின்றார். அவர் எதையும் வெறுப்பதுமில்லை. நமக்கு துன்பங்கள் வரும் போது அவர் நம்மை வெறுக்கிறார் என நினைக்க கூடாது. இந்த பொல்லாத உலகத்தில் நாம் எப்படி நடக்கணும் என்று கற்று தருகிறார். உண்மையான உறவுகளை காட்டி தருகிறார்.
வயல்வெளி மலர்களை வண்ண வண்ண நிறங்களால் வடிவமைத்துள்ளார். ஆழ்கடல் மீன்களுக்கும் அசராமல் ஆகாரம் அளிக்கிறார். வானத்து பறவைகளுக்கு வயிறார உணவூட்டி வருகிறார். கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் நேரம் தவறாது இரை கொடுத்து மகிழ்கிறார். கானகத்து கருங்குரங்குக்கும் காலம் தவறாது கருணை புரிகிறார்.
அவர் கண்களில் எந்த படைப்பும் தவறவில்லை. எல்லாவற்றையும் போசித்து மகிழ்கிறார்.அப்படிப்பட்ட இறைவன், அவர் சாயலாக படைத்த நம்மை மறப்பாரா. கண்டிப்பாக மாட்டார்.
அந்தந்த சமயத்தில் நமக்கு தேவையான ஞானத்தை தருவார். நம்மை நேசிக்கிற தேவன். அரவணக்கிற தந்தை.
ஜெபம்: ஆண்டவரே. இரவெல்லாம் எங்களோடு இருந்து இந்த அழகிய காலையை காண செய்த உமது அன்புக்கு நன்றி. உம்மை துதிக்கிறோம். எங்கள் பாவங்களை பாராது எங்களை நீர் நேசித்து உமது கிருபைக்குள் வைத்து காப்பதற்காக உமக்கு நன்றி. இந்நாளை உமது அருளால் நிரம்பி வழிய செய்தருளும். ஆமென்.
Add new comment