அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

நீங்கள் இவ்வாறு இறைவனிடம் வேண்டுங்கள்: ‘விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே,  உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! - மத்தேயு 6:9. அன்பு சகோதரமே. இது ஆண்டவர் இயேசு விண்ணக தந்தையை நோக்கி ஜெபிக்க சொல்லி கற்றுத் தந்த ஜெபம். இந்த ஜெபத்தை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தனது இயேசு காவியம் என்ற பதிப்பில் மிக அழகான கவிதையாக படைத்துள்ளார். இந்த அதிகாலையில் நாமும் இறைவனை நோக்கி அந்த ஜெபத்தை சொல்வோம்.

வானிலே அரசு கொண்ட

வடிவுடை எங்கள் தந்தாய்

மண்ணிலே உமது நாமம்

மாபெரும் புனிதம் போற்றி!.

விண்ணுடை உமது ஆட்சி

விரைந்திங்கு வருதல் வேண்டும்!

அண்ணலே உமது உள்ளம்

அவ்விடம் இயங்கும் வண்ணம் 

மண்ணிலும் இயங்கவேண்டும்

மைந்தர்கள் இறைஞ்சு கின்றோம்!

உலகினில் எமக்கு நாளும் 

உணவினை அளித்தல் வேண்டும் 

இலகும் எம் பகைவர் தம்மை

எம்முளம் பொருத்த தேபோல் 

நலமிலாக் குறையாம் செய்தால் 

நாடிநீர் பொறுத்தல் வேண்டும்!

சோதனை துன்பம் எம்மைத் 

தொடராது காவல் கொள்வீர் 

துயர்தரும் அலகை மாக்கள் 

தொடர்ந்தெமை வருத்தும் போது

அவரிட மிருந்து எம்மை

ஆண்டவா காப்பாய் போற்றி!

தந்தையே போற்றி போற்றி !

தர்மமே போற்றி போற்றி!

சிந்தையில் இழைத்த எங்கள்

ஜீவனே போற்றி போற்றி!

ஆமென் ஆமென் ஆமென்.

Add new comment

5 + 4 =