Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer
இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார் - மாற்கு 1:40. ஆண்டவர் மனம் இறங்குகிற இறைவன். பரிவும் இரக்கமும் அவரிடத்தில் கடலளவு உண்டு. ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார். ஆண்டவர் இயேசு அந்த மனிதன் மீது இரக்கம் கொண்டு அவரை குணமாக்குகிறார்.
அவர் தம் பிள்ளைகள் தவிப்பதை பார்க்கிற தந்தை இல்லை. இரக்கம் காட்டுகிற இறைவன். மனது உருகுகிற இறைவன். நம்மை தேடி வந்து அரவணைக்கிற அன்பு நேசர்.
கண்ணதாசன் வரிகள்
ஆண்டவா உன் அடைக்கலம் என்றவன்
வேண்டியாங்கு வீழ்ந்தனன் காலிலே!
காண்டகுந்தகை யோனவன் நெஞ்சிலே
வேண்டுமட்டும் கருணையை வீசினார்!
கருணையை வேண்டுமட்டும் தருகிற இறைவன். அன்பின் இறைவன். நல்ல ஆயன்.
ஜெபம்:
ஆண்டவரே நாங்கள் நிற்பதும் நடப்பதும் உம் கருனையப்பா. உமக்கு நன்றி. கோழி தன் குஞ்சுகளை பாதுகாப்பது போல எங்களை காக்கும் இறைவா உமக்கு நன்றி. இந்த அதிகாலையில் எங்கள் மீது இரக்கத்தை ஊற்றாக பொழிந்து நாள்முழுவதும் எங்களோடு இருந்து பாதுகாக்க போவதற்காக நன்றி. ஆமென்.
Add new comment