அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார் - தொடக்க நூல் 3:21. ஆண்டவர் நம்மை உடுத்தி அழகு பார்க்கிற தேவன். ஆதாம் ஏவாள் ஆண்டவருடைய வார்த்தையை மீறி பாவம் செய்துட்டாங்க. ஆடையின்றி இருந்ததை உணர்ந்து மரத்திற்கு பின்னால் ஒளியிராங்க.  ஆனால் ஆண்டவர் அவங்களை எப்படியோ போங்க என்று விடலை.  அவர்கள் வெட்கப்பட்டு மனம் நொந்து பயப்படுறதை பார்க்கிறார். அவங்களோட உள்ள உணர்வுகளை அறிகிறார். அவங்களுக்கு தோல் உடைகளை அவரே செய்து உடுத்துக்கிறார்.  அவங்களை வெறுக்கலை. நேசிக்கிறார்.

ஆம் சகோதரமே அவர் நம்மை அதிகமாக நேசிக்கிறார். நாம் அவமானப்பட விடமாட்டார். ஆவியின் ஆடையினால் நம் ஆன்மாவை மூடி காக்கிறார்.  அழகிய உடைகளால் நம் உடலை மூடுகிறார்.  ஞானத்தின் ஆடைகளால் நம் சிந்தையை அழகுபடுத்துகிறார்.

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே

அதிரூபன் தோன்றினானே

வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய்

வந்தவன் மின்னினானே

விண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ

புகழ்மைந்தன் தோன்றினானே

கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே

சிசுபாலன் தோன்றினானே

ஜெபம்:  இந்த காலை கருக்கலிலே உம்மை நாடி வந்துள்ளோம் ஆண்டவரே. எங்களை உம்  ஆவியின் ஆடையால் உடுத்தி அலங்கரிக்க வேண்டுகிறோம். அப்பா உம்  அன்பை இன்னும் அதிகமாக பெற்று உம் பிள்ளைகளாக நாங்கள் வாழவும் உம் சமூகத்தில் நிலைத்து நின்று அருள் பெறவும் ஆசீர்வதியும். ஆமென்.

Add new comment

9 + 0 =