அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். அவர்களைப் படைத்த நாளில் அவர்களுக்கு ஆசி வழங்கி, ‘மனிதர்’ என்று பெயரிட்டார் - தொடக்க நூல் 5:2. ஆண்டவர் மனிதர்களை தனியாக படைக்க வில்லை . ஆணும் பெண்ணுமாக படைத்தார். அவர்களுக்கு ஆசி வழங்கினார். அப்போ கடவுள் மனிதன்  சேர்ந்து வாழனும் என்று விரும்புகின்றார். நமக்கு ஏற்ற துணையைத்தான் அவர் நமக்கு தந்துள்ளார்.

அவர் படைத்த படைப்பில் நாம் குறை காண முடியாது. எனவே இதுவும் நல்லது என ஏற்று கொண்டு நம்முடைய வாழ்வை அன்பின் பூங்கா ஆக்குவோம். ஆண்டவர் நம்மோடு இருந்து நம் வாழ்வை இன்னும் சந்தோசமாக்குவார். சேர்ந்து ஜெபிப்போம், சேர்ந்து ஆலயம்  செல்வோம். இந்த வாழ்வு ஆண்டவர் விரும்புகிற வாழ்வு. அவர் கொடுத்த வாழ்வு. சந்தோஷமாக மிக சந்தோஷமாக வாழுவோம். நம் அப்பா இயேசு நம்மோடு இருப்பார். அதிகாலையில் நிறைந்த மகிழ்வோடு நம் வேலைகளை தொடங்குவோம் . 

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு 

வீழ்வார் அளிக்கும் அளி.

உரை: அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்.

ஜெபம்: ஆண்டவரே குடும்பம் குடும்பமாக எங்களை நீர் ஆசீர்வதிபதற்காக நன்றி. இந்த நாளில் எங்களையும் எங்களை சார்ந்த அனைவரையும் நல்ல உடல் உள்ள சுகம் கொடுத்து ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.  எங்கள் தேவைகள் சந்திக்கப்பட்டு உம்மிலே நிறைவு காண அருள் தாரும். நாள் முழுவதும் எங்களோடு இரும். ஆமென்.

Add new comment

2 + 18 =