அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார் - 1 யோவான் 4:8. நாம் கடவுளை அன்பு செய்யவில்லை. அவர்தான் முதலில் நம்மை அன்பு செய்தார்.  நாம் உருவாகும் முன்பே நம் பெயரை உள்ளங்கையில் பொரித்து வைத்துள்ளவர்.   ஒரே மகனை நமக்காக சிலுவை சாவுக்கு ஒப்புகொடுக்குக்கும் அளவு உண்மையான அன்பு வைத்திருந்தார்.

உண்மையான அன்பு பொறாமைப் படாது. தன்னை புகழ்ந்து பேசாது. இறுமாப்பு அடையாது. அயோக்கியமானதை செய்யாது. தீங்கு நினையாது. அநியாயத்தில்  சந்தோசப்படாது. சத்தியத்தில் சந்தோஷப்படும். அத்தகைய அன்பு ஆண்டவருடைய அன்பு. நான் உங்களை அன்பு செய்வது போல நீங்களும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யுங்கள் என்கிறார் ஆண்டவர். 

சிந்தனை: நாம் எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளை அன்பு செய்கிறோமா? நமக்கு அடுத்திருப்பவர்களையும் அன்பு செய்கிறோமா?

ஜெபம்: ஆண்டவரே நாங்கள் அன்பிலே வேரூன்றி உமது அன்பின் ஆழம் அகலம் உயரம் நீளம் இன்னதென்று உணர்ந்து சகல சம்பூர்ணத்தாலும் நிரம்பப்பட வேண்டுமென்று உம் அருள் வேண்டுகிறோம்.  

Add new comment

4 + 7 =