அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

கடவுளிடத்தில் கேட்கட்டும் அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர் - யாக்கோபு  1:5. சாலொமோன் ராஜா ஆண்டவரிடம்" உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்" என்று கேட்டார்.

சாலமோன் இவ்வாறு கேட்டது ஆண்டவருக்கு உகந்ததாய் இருந்தது.எனவே இதோ! நான் இப்பொழுது நீ கேட்டபடியே செய்கிறேன். உனக்கு நிகராக, உனக்கு முன்னே எவரும் இருந்ததில்லை. உனக்குப் பின்னே இருக்கப் போவதுமில்லை  என்கிறார். அந்த அளவுக்கு ஞானமும் பகுத்தறிவும் நிறைந்த உள்ளத்தை உனக்கு வழங்குகிறேன். இன்னும் நீ கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருவேன். ஆகையால் உன் வாழ்நாள் முழுவதிலும் உனக்கு இணையான அரசன் எவனும் இரான்.(1 அரசர்கள் 3:13)

ஞானத்தை நாம் பெற வேண்டுமென்றால் நாம் தூய ஆவியாரின் துணையை மட்டுமே கேட்க வேண்டும். இந்த அதிகாலையில் மெய்ஞ்ஞானத்தையும்,  நிறைவான அறிவையும் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் அருள வேண்டுவோம்

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் 

நீள்வினையால் நீளும் குடி.

உரை: முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.

ஜெபம்: ஆண்டவரே இந்த உலகில் நாங்கள் பாவங்களுக்கு நீங்கலாகி,  சவால்களை எதிர்கொள்ள வேண்டிய ஞானத்தை கேட்கிறோம். தூய ஆவியின் துணையோடு நாங்கள் கடந்து செல்ல போதுமான ஞானத்தை தாரும். ஆமென்.

Add new comment

1 + 1 =