அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; - பிலிப்பியர் 2:10. ஆண்டவர் இயேசு பிறந்தவுடன் வானதுதர்கள் அல்லேலூயா பாடி மகிழ்ந்தனர். இடையர்கள், சாமக்காவல் காத்தவர்கள், வந்து இயேசுவை வணங்கினர். கீழ்த்திசை ஞானிகள் பரிசு பொருட்களுடன் வந்து  அவரை மண்டியிட்டு வணங்கினர். அவருடைய பெயரை கேட்டதுமே பேய்கள் நடுங்கின. நோய்களிலிருந்தும் சுகம் கிடைத்தது. இறந்தவர் உயிர் பெற்றனர். 

காற்றையும் கடலையும் இரையாதே என்று இயேசு கடிந்து கொண்டதும் காற்றும் கடலும் கூட அவருக்கு பணிந்தது. அவரது மரணத்தின் போது, இறை மகனின் மரணத்தை காண பிடிக்காத தேவாலய திரைசீலைகள் தானே கிழிந்தன. பூமி எங்கும் இருள் உண்டாயிற்று. நிலநடுக்கம் ஏற்பட்டது. 

படைப்புகள் அனைத்தும் அடிபணியும் போது அவரது அன்புக்குரிய நாம் பணியாது இருக்கலாமோ? கண்டிப்பாக அவரை வணங்கணும். மனிதர்கள் நாமும் மண்டியிடனும். இயேசு என்ற பெயர் எப்பொழுதும் நம் நாவிலிருக்க வேண்டும்.  

வானோர் சேனை வாழ்த்தியது அங்கே
ஆயர் மக்கள் அனைவரும் ஒன்றாய்
ஆநிரைத் தொழுவினை அறிய நடந்தனர்
தேவகு மாரன் திருவடி வணங்கிக்
கீழ்த்திசை ஞானிகள் கிழக்கே நடந்தனர்

ஜெபம்: இயேசுவே உமது இனிய நாமத்துக்கு நன்றி. உம்மை பணிந்து ஆராதிகிறோம். நன்றி செலுத்துகிறோம். இந்த நாளின் எல்லா முயற்சிகளிலும் எல்லா முன்னெடுப்பு களிலும் உமது உயரிய நாமத்தை  அறிக்கையிட்டு வெற்றி காண அருள் தாரும். ஆமென்.

Add new comment

11 + 2 =