அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

எறும்பைப் பாருங்கள்; அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள் - நீதிமொழிகள் 6:6. எறும்புகள்: இவை வலிமையற்ற இனம்; எனினும், கோடைக்காலத்தில் உணவைச் சேமித்து வைத்துக் கொள்கின்றன . ஒரு நேரமும் அவை சோம்பேறிகளாக இருப்பதில்லை. எப்போதும் ஓடிக்கொண்டு இருக்கும்.  தங்களுடைய உணவு எங்காவது இருக்கிறது என்றால், அது மட்டும் போகாது .  ஒரு கும்பலையே கூட்டிட்டு போகும். தங்கள் உணவு தங்களை தேடி வரும் என்று அவை இருப்பதில்லை.  மேலும் ஏதாவது ஒரு உணவை ஒரு எறும்பால்  தூக்க முடியவில்லை என்றால் கொஞ்சம் எறும்புகள் சேர்ந்து தூக்கி செல்லும்.

நாம் அவற்றிடமிருந்து சுறு சுறுப்பையும், ஒற்றுமையையும் கற்று கொள்ள வேண்டும். நாம் உழைப்திலும் பொருள் தேடுவதிலும் எறும்பை போல இருக்க வேண்டும் என்கிறது  நீதிமொழிகள். 

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா 

ஊக்க முடையா னுழை.

உரை: சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிக் கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.

ஜெபம்:  ஆண்டவரே நாங்கள் எங்கள் பணிகளில் சோர்வுறாது சுறு சுறுப்பாக செயல்பட விரும்புகிறோம்.  இன்று எங்களோடு இருந்து எங்கள் கையின் வேலைகளை ஆசீர்வதிக்க வேண்டுகிறோம்.  

Add new comment

8 + 0 =