அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

உயர்குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! மாண்புறு அரியணையை அவர்களுக்கு உரிமையாக்குகின்றார்! - 1 சாமுவேல் 2:8. ஆண்டவர் வறியவரை அரியணை ஏற செய்கிறார். தாழ்ந்தோரை உயர்த்துகிறார். ஆடு மேய்க்கும் சிறுவனான தாவீதை அரியணை ஏறவைத்தார். தாவீது சென்ற இடத்திலெல்லாம் ஆண்டவர் வெற்றி காண செய்தார்.

அடிமையாக விற்கப்பட்ட யோசேப்பை ஆண்டவர் அரசவை ஆளுநராக்கினார்.  அனைத்தையும் ஆளும் அதிகாரத்தை அரசர் அவருக்கு கொடுக்கும் அளவுக்கு உயர்த்தினார். ரூத் ஏழை விதவை. தன் மாமியின் வார்த்தைக்கு கீழ்பணிந்து வயல்களில் விழும் கதிர்களை பொறுக்க செல்கிறார். அவளை ஆண்டவர் போவாசின் மனைவியாக உயர்த்தினார். இயேசு அந்த வழி தோன்றலில் தான் பிறந்தார். 

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் 
நீள்வினையால் நீளும் குடி.

உரை: முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.

ஜெபம்: ஆண்டவரே உம்மை துதிக்கிறோம். உமக்கு நன்றி செலுத்துகிறோம். அதனதன் காலத்தில் எல்லாவற்றையும் நேர்த்தியாய் செய்பவரே உமக்கு நன்றி. இன்றைய நாளில் எங்களை ஆசிர்வதியும். ஆமென்.

Add new comment

4 + 5 =