அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer

இயேசு தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார் - யோவான் 19:27. இயேசு தான் சாக போவது தெரிந்தும் அந்த கடைசி நிமிடத்தில் கூட தன் தாயை நினைவு கூர்ந்தார். தன்னை பத்து மாதம் பெற்று வளர்த்து இவ்வளவு துன்பங்களையும் தன் கண்களால் பார்த்து உள்ளம் நொறுங்கி நிற்கும் அந்த தாயை பார்க்கின்றார். 

இந்த உலகில் அவர்களை தனியாக விட்டு செல்ல அவர் விரும்பவில்லை. யோவானை  கூப்பிட்டு இதோ உன் தாய் என கூறி அவரது தாயிக்கு பொறுப்பான இடத்தை காட்டிவிட்டு உயிர் விடுகிறார். அந்நேரமுதல் முதல் மாதாவை யோவான்  தன் வீட்டில் வைத்து ஆதரவு அளித்ததாக விவிலியம் கூறுகின்றது. இது இயேசு தன் தாய் மீது வைத்த உண்மையான அன்பை காட்டுகிறது. 

நாம் நம் பெற்றோரை எப்படி நடத்துகிறோம்? அவர்களை ஆதரவற்ற நிலையில் விடாது அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோமா? அவர்களை அன்பு செய்து, விசாரித்து, தேவைகளில் நம்மால் முடிந்த உதவி செய்கிறோமா? சிந்திப்போம். ஆண்டவர் இயேசுவின் அடிசுவடுகளை பின்பற்றி வாழ முயற்சிப்போம்.

பெரியாரை பேணாது ஒழுகிற் பெரியாரால் 
பேரா இடும்பை தரும். 

உரை: பெரியோர்களை மதிக்காமல் நடந்து கொண்டால் நீங்காத பெருந்துன்பத்தை அடைய நேரிடும்.

ஜெபம்: ஆண்டவரே எங்கள் பெற்றோரின் நலனில் அக்கறை வைத்து, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வாழ விரும்புகிறோம். எங்களோடு இரும் ஆண்டவரே. எங்களை வழி நடத்தும். ஆமேன்.

Add new comment

3 + 3 =