Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்பருடன் அதிகாலைத்துளிகள் RVA Morning Prayer
“ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்” என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன் - திருப்பாடல்கள் 122:1. ஆண்டவருடைய இல்லத்தில் அவருடைய திருமுகத்தை பார்த்தபடி அமர்ந்திருப்பது எவ்வளவு ஆனந்தமானது. அமைதியானது. நம்முடைய உலக கவலைகள் எல்லாம் மறக்கும் இடம் ஆண்டவருடைய இல்லம் தான். அவருடைய சமூகம் தான். அவருடைய இல்லத்தில் நிறைவான சமதானமுண்டு. நிறைவான மகிழ்ச்சி உண்டு. உலகில் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதைவிட அவர் இல்லத்தில் ஓர் நாள் வாழ்வது மிக மேலானது.
மோயிசன் ஒவ்வொரு முறை சீனாய் மலைக்கு போய் இறைவனோடு பேசிவிட்டு வரும் போதும் அவருடைய முகம் அவ்வளவு பிரகாசமாய் இருந்தது என்று வேதத்தில் வாசிக்கிறோம். மக்கள் மோயிசனுடைய முகத்தை பார்க்க முடியாத அளவுக்கு ஒளியோடு இருக்குமாம். மேலும் ஆண்கள்மட்டும் 6 லெட்சம் பேர்கள் இருந்த அவ்வளவு பெரிய கூட்டத்தை வனாந்தர பாதையிலே நடத்தி வருகிறது எளிதான காரியமில்லை. அதுக்குறிய பலத்தையும் வல்லமையையும் மோசே, ஆண்டவருடைய இல்லமாக அவருக்கு திகழ்ந்த, சீனாய் மலையில் தான் பெற்றார்.
நாமும் ஆலயம் செல்வதற்கு ஆவலோடு, தகுதியான ஆயத்தங்களோடு செல்வோம். ஆடை அலங்காரங்கள் இவற்றில் காட்டும் அக்கறையை கொஞ்சமேனும் நம் ஆத்தும அலங்காரத்தில் காட்டுவோம். பரிசுத்தமான இடம் என்பதை மனதில் கொண்டு பயபக்தியோடு நடந்து கொள்வோம். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார். இறைவன் அடிசேரா தார்.
உரை: இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
ஜெபம்: ஆண்டவரே உமது இல்லத்தின் பரிசுத்ததிற்கு எதிராக நாங்கள் செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்கிறோம், உம் திருமலையாம் புதிய எருசலேமுக்கு நாங்கள் தகுதியுள்ளவர்களாக, அதில் நுழைய நாங்கள் ஆயத்தமாக, அக்களிப் போடு செயல்பட ஆற்றல் தாரும்.
Add new comment