அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

உமது பேரன்பை நான் வைகறையில் கண்டடையச் செய்யும்; ஏனெனில், உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; நான் நடக்க வேண்டிய அந்த வழியை எனக்குக் காட்டியருளும்; ஏனெனில், உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன் - திருப்பாடல்கள் 143:8. ஆண்டவருடைய அன்பு விலைமதிக்க முடியாததாகும்.  அதிகாலையில் அவரைத் தேடினால் நாம் அவருடைய அன்பை அனுபவிக்கலாம். 

நான் வேறு எது மேலும் நம்பிக்கை வைக்கவில்லை . உம்மை மட்டுமே என் எல்லாமாக கொண்டுள்ளேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை சார்ந்து நம்மை முற்றிலும் ஒப்படைத்தால் அவர் அவருடைய வழிகளை நமக்கு காட்டுவார். அவர் மீது நம்பிக்கை வைத்து  அவரை பார்க்க அதிகாலையில் கல்லறைக்கு சென்ற மரியாள்  உயிர்த்த இயேசுவை அந்த பேரன்பை விடியற்காலையில் கண்டாள். நற்செய்தி  அறிவிக்கப்படும் இடமெல்லாம்  இந்த சம்பவமும் அறிவிக்கப்படுகிற அளவுக்கு அவளுடைய பெயர் உயர்த்தப்பட்டது. 

சிந்தனை:  நாம் உண்மையிலே நம் நம்பிக்கை முழுவதும் அவர் மேலே வைத்துள்ளோமா? 

ஜெபம்: ஆண்டவரே உம் மீது அசையாத நம்பிக்கை வைத்து அதிகாலையில் உம் பேரன்பையும்  பகலெல்லாம் உம் வழிகளையும் கண்டுணர அருள் தாரும் .நாள் முழுவதும் எங்களோடு இரும்.  ஆமென்.

Add new comment

2 + 5 =