Visiting the deceased | கல்லறைகளைச் சந்தியுங்கள் | Mariyan

என்னுடைய அக்கா ஒருவரிடம் கேட்டேன். ஏன் கல்லறைக்குப் போகணும் அவர்களைச் சந்திக்கணும்? எப்பா எங்க விசுவாசத்தைக் கெடுத்துறதப்பா என்றார்கள். அப்போ அவர்கள் என்னிடம் ஒரு கேள்விகேட்டார்கள் - ஏன் கோவிலுக்குப் போகணும். கொஞ்சம் பதில் சொல்வது கடினமாகத்தான் இருந்தது. கடவுளின் பிரசன்னத்தை அமைதியில் உணர்வதற்குதான், கல்லறை என்பது அவர்களின் உறவிற்கான அடையாளம். அங்கு சென்று அவர்களைச் சந்திக்கின்றோம். கடவுள் நம்மோடு பயணிப்பதுபோல, வனதூதர்கள் நமக்கு உதவிசெய்வதுபோல, அவர்களும் நம்முடன் எப்பொழுதும் உடன்பயணிக்கலாம் என்றார்கள். 

நான் சிறுவனாக இருக்கும்போது, கல்லறைத் தோட்டத்திற்கு செல்வதற்கு பயப்படுவேன். அங்கு ஆவிகள் சுத்துவதாகவும், நம்மை பிடித்துகொள்ளும் என்பதாகவும், இறந்தவர்கள் பேய்களாக நடமாடி துன்புறுத்துவதாகவும் என்னுடைய சக தோழர்கள் சொல்வார்கள். இரவுநேரத்திலும், மதிய நேரத்திலும் அந்தப் பக்கம் செல்லக்கூடாது என்று சொல்வார்கள். 

குருவம்மா கல்லறையை விட்டு வருகிறாங்க, எனக்குத் தெரியுது என்றெல்லாம் சொல்வார்கள். அவுங்க வெள்ளைக் கலர் சேலை உடுத்திவராங்க என்றெல்லாம் சொல்வாங்க. ஆனால் உண்மையிலேயே அவர்கள் அவ்வாறு செய்வார்களா என்ற கேள்வி காலங்கள் கடந்தபின்புதான் எனக்குத் தோன்றியது. அவர்கள் என்னோடு பயணிப்பதை உணர ஆரம்பித்தேன்.

அவர்கள் இறைவனின் திருக்கூட்டத்தின் உறுப்பினர்கள். அவர்கள் நமக்கு தீங்குசெய்யமாட்டார்கள். அவர்களிடம் நம்முடைய வானதூதர்களிடம் பேசுவதுபோல, அவர்கள் உயிருடன் இருந்தபோது எவ்வாறு பேசினார்களோ அவ்வாறே பேசலாம். அப்போது அவர்கள் நம்முடன் இருப்பதையும் ஆபத்துகளிலும், தேவைகளிலும் நம்முடன் உடன் பயணிப்பதை உணரலாம். எனவே கல்லறைகளில் அவர்களைச் சந்தியுங்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுடன் வீட்டிலேயே பேசுங்கள். அவர்களுக்காக திருப்பலி ஒப்புக்கொடுங்கள். அவர்களுக்காக செபியுங்கள்.
 

Add new comment

2 + 2 =