பிரசன்னமானவரே

மேகம் சந்திப்புக்கூடாரத்தை மூடிற்று; ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று.

சந்திப்புக்கூடாரத்தின் மேலே மேகம் நின்றிருந்ததாலும், ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பியதாலும் மோசே உள்ளே நுழைய முடியாமல் போயிற்று.

விடுதலைப் பயணம்  40-34, 35

ஆண்டவரின் மாட்சி அத்துணை பெரியது. மோசே திரு உறைவிடத்தில் நுழைய முடியாத அளவு அவருடைய மாட்சி இருந்தது. அத்துணை மாட்சி நிறைந்த ஆண்டவர் நம்மை நினைப்பதற்கு நாம் எம்மாத்திரம்.  அப்படிப்பட்ட மாட்சியுள்ள கடவுள் பரிவு நிறைந்தவரும்  இரக்கம் காட்டுபவருமாக இருக்கிறார்.

நாம் நிற்பதும் அழிந்து போகாது வாழ்வதும் அவருடைய பரிவாலும் இரக்கத்தாலும் தான். அவரை மனிதர்களாகிய நாம் நம் ஊன கண்களால்கான இயலாது. ஆனால் அவருடைய பிரசன்னத்தையும் உடனிருப்பையும் நம் வாழ்வில் பல நேரங்களில் நாம் உணரலாம்.  அவர் முன் நிற்க இயலாது. அத்தனை மாட்சியுடைவர் ஆண்டவர்.  

அவர்,  என் பிரசன்னம் உனக்கு முன்பாக செல்லும்  நம் ஒவ்வொருவரையும் பார்த்து கூறுகிறார்.  அவர் பிரசன்னத்தை உணர்ந்தவர்களாக நாம் இன்றைய நாளை தொடர்வோம். 

 

ஆண்டவர் என் முன்பாக செல்லும் உம் பிரசன்னத்துக்கு நன்றி. எனக்கு முன்பாக இருக்கும் கோணலானவைகளை நேராக்கி,  கரடு முரடானவற்றை சமமாக்கி தாரும். எனக்கான வழியை அமைத்து தாரும் ஆண்டவரே.உம் மகத்துவத்தை நானும் என் வாழ்வில் காண செய்யும். உமக்கு புகழும்  மாட்சியும் உரியதாகுக. ஆமென்.

 

Add new comment

1 + 7 =