தூய்மைப்யாக்கும் அன்பு | Purifying Love of God | Mariyan

அம்மாச்சி அனுபவம். நம்மிடையே வாழ்ந்து, காலத்தாலும் இடத்தாலும் நம்மைவிட்டுப் பிரிந்தாலும், இறைவனின் திருக்கூட்டத்தின் உறுப்பினர்கள் என்ற முறையில் நம்முடன் அவர்கள் இணைந்துதான் இருக்கிறார்கள். அப்படிப்பார்க்கின்றபோது, அவர்கள் விண்ணகத்திலிருந்தார்கள் என்றால் அவர்கள் இறைவனை முகமுகமாய் தரிசித்து அவர் அன்பினால் ஆட்கொள்ளப்பட்டிருப்பார்கள். 

ஒருவேளை அவர்கள் செய்த தவறுகளால் அவர்கள் இறைவனைக் கண்டு, அவரிடம் செல்லமுடியாமல் உத்தரிக்கும் தலத்தில் இருந்தார்கள் என்றால் அவர்களுக்காக நம்முடைய செபம் தேவைப்படுகின்றது. உத்தரிக்கும் என்ற சொல்லே தங்களுடைய பாவத்திற்கு பரிகாரம் செய்யும் இடம் என்றுதானே அர்த்தம். உத்தரிக்கத்தலம் என்றால் என்ன – கடவுளின் பிரசன்னத்தில் இருந்துகொண்டு, கடவுளின் மாபெரும் அன்பை அனுபவிக்கு முடியாமல் அவர்கள் படும் வேதனையை உத்தரிக்கம் என்று சொல்கிறோம். அதுதான் கடவுளின் தூய்மைப் படுத்தும் அன்பினால் அவர்கள்  புதுப்பிக்கப்படும் இடம் என்கிறது திருஅவை (Purifying Love of God). எனவே நாம் அவர்களுக்காகச் செபிக்கவேண்டும். 

நம்முடைய செபத்தில் இயேசு கற்பித்ததுபோல, அடிநாதமாக இருப்பது மன்னிப்பு. நமக்கு எதிராக அவர்கள் செய்துவிட்டுச்சென்ற காரியங்களுக்காக, அதே வேளையில் நாம் அவர்களுக்கு எதிராகச் செய்த காரியங்களுக்காக மன்னிப்புக்கொடுத்து, பெற்றுக்கொள்ளவேண்டும். அப்பொழுது அவர்கள் விண்ணகத்தில் கடவுளை முகமுகமாய் காண்பார்கள். எனவே இறந்தவர்களுக்காகச் செபிப்பது அவசியம், கடமை.

Add new comment

1 + 2 =