Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
தனியாக விட்டுறாதீங்க | Together we journey - Heaven | Mariyan
விண்ணகம் என்பது இடமா (Place)? நிலையா (State)? விண்ணகம் பலவேளைகளில் மறைபொருளாக தெரிந்தாலும், நாம் உணரலாம், புரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். சிலர் சொல்லுகிறார்கள் விண்ணகம் என்பது ஒரு இடமல்ல அது ஒரு நிலை. மண்ணிலேயே விண்ணகம் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். என்னுடைய சகோதரிடம் கேட்டேன், அவர் சொன்னார் இயேசு நான் உங்களுக்கு ஒரு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன் என்றுதானே சொன்னார். உங்களை விண்ணகம் என்ற நிலைக்கு உயர்த்துவதற்கு ஏற்பாடு செய்கிறேன் என்றா சொன்னார். அப்படியிருந்தால் அது இங்கேயே நடைபெறும் என்று அவர் சொல்லியிருக்கலாமே என்றும் சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது, எனவே அது ஒரு இடமாகத்தான் இருக்கும் என நானும் நம்புகிறேன்.
Heaven is for Real என்ற ஒரு புத்தகமானது அமெரிக்காவைச் சார்ந்த அருள்திரு டோடு பர்ப்போவினால் எழுதப்பட்டப் புத்தகம். அவருடைய 4 வயது மகனின் விண்ணக அனுபவங்களைச் சித்தரிக்கிறார். இந்த புத்தமானது இப்பொழுது படமாகவும் இருக்கிறது. இவருடைய மகன் உடல்நிலைக் குறைவால் அறுவைச் சிகிச்சை நடைபெறுகிறது, அவன் பிழைப்பான் என்ற நம்பிக்கையில்லை, அந்த நிலையில் அவன் குணம்பெறுகிறான். அவன் அறுவைச் சிகிச்சை நடைபெற்றபொழுது அவன் விண்ணகம் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அவன் கண்டவைகளையெல்லாம் விவரிக்கின்றான். மிகவும் அறிவாளியான அவனுடைய தந்தைக்கு அதை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கிறது. பின்னர் அவர் ஏற்றுக்கொள்கிறார். அதுவரை விண்ணகம் நிலை என்று எண்ணியிருந்தவர், அது இடம் என நம்புகிறார்.
இறுதியில் அவர் சொல்கிறார்: விண்ணுலகில் இருப்பதுபோல மண்ணுலகிலும் இருப்பதாக என பலமுறை சொல்லியிருக்கிறேன், அறிவித்திருக்கின்றேன். ஆனால் நான் உணரவில்லை. நம்பவில்லை. மண்ணகம்போல விண்ணுலகம் என்பது ஒரு இடம். ஆனால் விண்ணகத்தின் மாட்சியின் முன்சுவையை நாம் இந்த உலகில் வாழ்கின்றபோது அனுபவிக்கலாம். அது ஒரு குழந்தை பிறக்கின்றபோது வரும் இனம்புரியாத மகிழ்ச்சி, ஒரு பேராபத்திலிருந்து காப்பாhற்றப்படும்போது வரும் இனம்புரியாத அமைதி – விண்ணகத்தில் நிலையானது.
விண்ணகம் என்ற ஒன்று இல்லையென்றால் நாம் எப்படிப்பட்ட வாழ்வு இந்த நேரத்தில் வாழ்ந்துகொண்டிருப்போம். அப்படியொன்று இருப்பதால்தான் நாம் நல்லவர்களாக வாழ முயலுகின்றோம். அந்த விண்ணகத்தில் நமக்கு இடம் வேண்டுமென்றால் இந்த உலகில் வாழும் யாரும் தனியாக விட்டுவிடப்படவில்லை என்பதனை எல்லோருக்கும் நம்முடைய அன்பினால் எடுத்துக்கூறவேண்டும். Tell everyone that they are not alone. நாம் தனி ஆட்கள் அல்ல, ஆண்டவரின் திருக்கூட்டத்தின் உறுப்பினர்கள், பங்காளிகள்.
Add new comment