ஏன் புனிதர்கள் தேவை? | why do we need saints? |Mariyan

கடவுள் மனிதனாகப் பிறக்கவேண்டும், அவன் காதலித்து வேதனையை அனுபவிக்கவேண்டும் என்னும் கருத்துடைய பாடல் வரிகளைக் கேட்டிருப்போம். இது இப்பொழுது சினிமாவில் வந்த வரிகள் மட்டுமல்ல, மக்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் கடவுளுக்கு எதிராக கடவுளிடமே முறையிடும் எண்ணக்குவியல்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

நம்முடைய மனநிலையை உணர்ந்த கடவுள், தன்னுடைய ஒரே மகiனை இவ்வுலகிற்கு அனுப்பினார். அவர் பாவம் தவிர மற்ற அனைத்திலும் மனிதருக்கு இணையாகவே இருந்தார். மனிதனாக வாழ்ந்து  துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்தார், சோதிக்கப்பட்டார், நேர்மையாக இருந்ததற்காக புறந்தள்ளப்பட்டார், நன்மைகள் செய்ததற்காகத் துன்பப்பட்டார். இருந்தபோதிலும், மக்கள் ஒரு கட்டத்தில் அவர் மனிதனாக இருந்தாலும், அவர் கடவுளின் மகன்தானே. அதனால்தான் அவரால் செய்யமுடிந்தது என நினைக்க ஆரம்பித்தார்கள். 

எனவேதான் சில மனிதர்கள் இயேசு வாழ்ந்துகாட்டியதை வாழமுயன்றார்கள். புனிதர்கள் என்பவர்கள் உருவானார்கள். இந்த புனிதர்கள் மனித இயல்பின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்து, மனித பலவீனத்தோடு நடந்து, கடவுளைக் கண்டுகொண்டார்கள். நாமும்; இயேசுவின் வழியில் புனித நிலையை அடைவது சாத்திமே என்பதனை நமக்கு உணர்த்துகிறார்கள். எனவேதான் அனைத்துப் புனிதர்கள் விழாவில் நாம் அனைவரும் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்கிறோம். நாம் ஒவ்வொருவரும் புனிதராகும் தகுதியுள்ளவர்கள். 
 

Add new comment

14 + 1 =