Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்னை மரியாவின் விண்ணேற்பு – விளக்கம் | Assumption of Mary | Fr. Emmanuvel Mariyan
அன்னை மரியாள் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார். இயேசு கிறிஸ்து விண்ணகத்திற்குச் சென்றார். இது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.
அன்னை மரியாவுக்கும் நமக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு. அன்னை மரியாவின் கரம் பற்றி நடந்துகொண்டிருக்கின்றோம். அவரின் பரிந்துரையினால் நலம் பெற்றவர்கள் இவ்வுலகில் ஏராளம். தாராளம்.
எனது அண்ணன் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். அவர் ஒரு முறை மருத்துவமனையில் நோயுற்றிருந்து கேன்சர் நோயளியைச் சந்தித்தார். அவர் தான் இன்னும் மூன்று மாதங்களில் இறந்துவிடப்போவதாக மருத்துவர்கள் கூறினார்கள் என்றார். அப்பொழுது தன் கையிலிருந்த செபமாலையை அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு என் அண்ணன் சொன்னார். அம்மா, இது செபமாலை அல்ல, அன்னையின் கரங்கள். அன்னையின் கரத்தைப்பிடித்து வேண்டுவதுபோல இந்த செபமாலையைப் பிடித்து வேண்டுங்கள். அன்னையின் பரிந்துரையால் நீங்கள் நலம் பெறுவீர்கள் என்றார். ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகியும் அந்த பெண் உயிரோடு இருக்கிறார். மருத்துவருக்கெல்லாம் மருத்துவரான இறைவன் தனது தாயின் பரிந்துரைக்கு பதிலளித்தார். தாயிடம் கேளுங்கள் எல்லாம் பெற்றுத்தருவார்.
அன்னையின் விண்ணேற்பு நமக்கு புதிய நம்பிக்கை வாழ்வின் அச்சாரம். புனித தமஸ்குஸ் ஜான் அவர்களின் கருத்துப்படி,
451 ஆம் ஆண்டு சால்சிடன் திருச்சங்கத்தின் போது உரோமை பேரரசன் மார்சியன் அன்னை மரியாள், இறைவனின் தாயின் உடலைப் பற்றிய கருத்தினையும், அதனை கல்லறையை திறப்பது பற்றிய வேண்டுதலை வைத்தார்.
புனித சுவனல் அப்போதைய எருசலேமின் ஆயர், அன்னை மரியாள் அனைத்து திருத்தூதர்களின் பிரசன்னத்தில்தான் இறந்தார்கள். புனித தோமையார் அவருடைய கல்லறையை திறக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தபோது, அவருடைய கல்லறை திறக்கப்பட்டது. ஆனால் கல்லறை காலியாக இருந்தது. அன்றிலிருந்து திருத்தூதர்கள் அன்னை மரியளுடைய உடல் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது என்று முடிவுசெய்தார்கள் என்று பேரரசர் மார்சியனுக்கு இவர் பதிலளித்தார்.
அதே வேளையில்,
• எந்த காலத்திலும் அவருடைய கல்லறையை வணங்கியதில்லை.
• 5 நூற்றாண்டு வரை அவருடைய அடக்க இடம் பற்றிய ஒரு கதைகூட வரவில்லை.
• அன்னையின் திருப்பண்டங்கள் எங்கும் இருப்பதாகவும், யாரும் வைத்திருப்பதாகவும் எந்த தகவலும் இல்லை.
• 16 ஆண்டுகள் அன்னையின் விண்ணேற்பு பற்றி எந்த இறையியலாளரோ, அல்லது இறையியல் பள்ளிகளோ இதைப் பற்றி கேள்விகள் எழுப்பியதில்லை.
• அவர் விண்ணுக்கு எடுத்துச் செல்லப்பட்டார் என்ற செய்தி பல இடங்களிலும், எழுத்துகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் சொல்கிறார், இரண்டாவது மூன்றாம் நூற்றாண்டில் இருந்த திருமறை புறநூல் ட்ரான்சிடஸ் மரியா - Transitus Maria - The Crossing over of Mary - விண்ணகத்திற்கு எடுத்துச் சென்றதைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
எட்டாம் நூற்றாண்டின்போது, திருத்தந்தை அட்ரியன் காலத்தில் அன்னை மரியாள் நினைவுவிழா கொண்டாடினார். அது பின்னர் அன்னை மரியாவின் விண்ணேற்பாக மாறியது. பின்னர் உரோமை நகரில் திருத்தந்தை செர்சியஸ் இந்த பெருவிழாவை 8 நூற்றாண்டில் தொடங்கினார்.
வரலாற்றில்,
1946 ஆம் ஆண்டு மே மாதம் தேய்பரே வெர்சினிஸ் மரியா என்னும் ஒரு சுற்றுமடல் ஒன்றை திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் வெளியிட்டார். அதன் வழியாக ஆயர்கள் குருக்கள் வழியாக நம்பிக்கையாளரின் அன்னை விண்ணேற்பினை திருத்தூது அமைப்புவிதி தொகுப்பாக அறிவிப்பதற்கானக் கருத்துக்களை கொடுக்குமாறு அழைப்பினை விடுத்தார். அந்த அழைப்பிற்கான பதில்கள் கொடுக்கப்பட்டன. அவற்றில் 1181 பதில்களில் 6 பதில்கள் மட்டுமே நேர்மறையானதாக இல்லை.
1950 ஆம் ஆண்டு 1 நவம்பர் திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர் அவர்கள் முனிபி சென்டி சிமுஸ் தேயுஸ், மிகவும் தாராளமான கடவுள் (The Most Bountiful God) என்ற தனது திருத்தூது அமைப்புவிதித் தொகுப்பு வழியாக (Apostolic Constitution) அன்னை மரியாவின் விண்ணேற்பு பற்றிய மறைக் கோட்பாட்டின் வரையறுத்தார். இது இயேசு நமக்குக் கொடுத்த வாக்குறுதியான நிலைவாழ்வும், இறந்தோரின் உயிர்ப்பு உண்டு என்பதை நமக்கு அறிதியிட்டுக் கூறுகிறது. தன்னுடைய மண்ணுலக வாழ்வு நிறைவுற்றபோது, அன்னை மரியாள் விண்ணிற்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
இயேசு நமக்குக் கொடுத்த வாக்குறுதியாகிய நிலைவாழ்வும், இறந்தோரின் உயிர்ப்பும் உண்டு என்பதை அன்னை மரியா நமக்கு நிருபித்துக்காட்டியுள்ளார். ஆக அன்னை மரியா உடலோடும் ஆன்மாவோடும் எடுத்துச் செல்லப்பட்டது நாம் அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டு, உறுதிமொழி. இயேசுவின் வாக்குறுதியின் முதல்கட்ட நிறைவு எனவும் சொல்லலாம்.
ஐரோப்பாவிலும், மற்ற நாடுகளிலும் இந்த விழாவின்போது மக்கள் தங்களுடைய விளைச்சலின் முதற்கனியை கொண்டுவந்து, அதனை ஆசீர்வதிப்பார்கள். காரணம், அன்னை மரியாள் படைப்பின் முதற்கனி. இயேசுவின்மீது முழு நம்பிக்கை கொண்டதால் அவர் உயிர்ப்பினையும் நிலைவாழ்வையும் தனதாக்கிக்கொண்டார். வரவிருக்கின்ற மபெரும் அறுவடையின் முதற்கனி என்பதன் அடையாளமாக இந்த பாரம்பரிய முறைப் பின்பற்றப்படுகின்றது.
அன்னை மரியாவினைப் போல நாமும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, உடலோடு ஆன்மாவோடும் இறைவனில் இணைய வாழ்வைப் பயணிப்போம்.
Add new comment