Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
81 வயது மகளின் நெகிழ்ச்சி கதை!
61 வருட பாசப்போராட்டம் 103 வயது தாயை கண்டுபிடித்த 81 வயது மகளின் நெகிழ்ச்சி கதை!
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த 81 வயதான எல்லீஸ் மெக்கென் தனது 81 ஆவது வயதில் தன்னை பெற்றெடுத்த தாயை கண்டுபிடித்துள்ளார்.
சிறு வயது இருக்கும்போதே தனது தாயை பிரிந்துள்ளார்.
19 வயதில்தான் தான் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட குழந்தை என தெரிய வந்திருக்கிறது.
தான் இறப்பதற்குள் தன்னை பெற்றெடுத்த தாயை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆசை மெக்கென்க்கு இருந்தது.
61 ஆண்டுகளாக தனது தாயைத் தேடி வந்துள்ளார். 19 வயது முதல் சம்பாதிக்கும் பணத்தை வைத்து தாயை தேடும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளார் இவருக்கு ரொனால்டோ என்கின்ற கணவரும் 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.
தனக்கு தற்போது 81 வயதாகிவிட்ட நிலையில் அயர்லாந்து நாட்டின் பிரபல வானொலியில் தனது தாய் மற்றும் தனது தாயை பிரிந்த மருத்துவமனை குறித்த விவரங்களை தெரிவித்துள்ளார்.
ரத்த உறவு யாரையாவது சந்தித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ரேடியோ ஒன்றின் உதவியை நாடியுள்ளார் அதன் பயனாக தன்னுடைய தாயை சந்திக்க முடிந்தது.
இதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது, அதில் பேசிய மருத்துவர் உங்கள் குடும்பத்தை எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.
இதைக் கேட்டதும் மகிழ்ச்சியில் உறைந்த மெக்கென் அவரது உதவியுடன் தனது குடும்பத்தை தேட ஆரம்பித்துள்ளார். பல்வேறு தேடல்களுக்குப்பின் தனது குடும்பத்தை கண்டுபிடித்துள்ளார்.
அயர்லாந்தின் பெத்தானி குடியிருப்பில் 103 வயதான மகனின் தாய் வசித்துள்ளார் தனது தாயுடன் பேசிய மகன் நான் உயிருடன் இருந்தது உங்களுக்கு ஏன் தெரியவில்லை ஏன் தெரியவில்லை என ஆழ்மனதில் இருந்து அழுகையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் அவர் பேசியது எதையும் அவரது தாயார் கேட்க முடியவில்லை.
வயது முதிர்வால் அவருக்கு கேட்கும் திறன் இழந்து விட்டது.
இதனால் கூறியதெல்லாம் அவரது தாய் எனக்கு கேட்கவில்லை என பதிலளித்துள்ளார்.
போனில் பேசிய மகன் தனது தாயை நேரில் சந்திக்கும் ஆவலில் இருக்கிறார்.
பின்னர் மீண்டும் ரேடியோவில் தோன்றிய மெக்கென் 61 வருட தேடலின் பயனாக தாயை கண்டுபிடித்துவிட்டேன் என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஒரு மலையின் உச்சியில் நின்று நான் அனாதை இல்லை என கூச்சலிட போகிறேன் என தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அவருக்கு 103 வயது நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் 104 வயதை அடைய உள்ளதாகவும் தெரிவித்தார்.
தாயும் மகளும் நீடூடி வாழ்க!
Add new comment