வெளிப்பாடு

அவ்வேளையில் இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.

மத்தேயு 11-25

ஆண்டவர்  மனித சாயலில், இயேசு என்ற பெயரில், இவ்வுலகில்  தம்மை வெளிப்படுத்தினார். 

இயேசு  பலருக்கு தன்னை வெளிப்படுத்தினார்.  

சமுதாயத்தால் வெறுக்கப்பட்ட, சமாரிய பெண்ணுக்கு, தான்  யார்? தன்னை எப்படி ஆராதிக்க வேண்டும் என்ற உண்மையை” வெளிப்படுத்தினார். 

அவரின்  மிதியடிகளின் வாரை கூட   அவிழ்க்க  எனக்கு தகுதியில்லை என்ற திருமுழுக்கு யோவானுக்கு, “காணக்கூடாத கடவுளை  மனிதகுலம் கண்டுகொள்ளுமென்ற உண்மையை” வெளிப்படுத்தினார். 

தன் தவறை உணர்ந்த கள்ளனுக்கு, “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்று நிலை வாழ்வை வெளிப்படுத்தினார்.

நான் கொடும் பாவி என்று அறிக்கையிட்ட பவுலுக்கு, “உயிர்தெழுதலின் வல்லமையை”  வெளிப்படுத்தினார். 

பாமர மீனவனான யோவானுக்கு,  “பரலோகத்தின் மகிமையை வெளிப்பாடுகள் மூலமாக வெளிப்படுத்தினார். 

படிப்பறிவற்றப் பேதுருவுக்கு, “தமது வருகையில் பாடுகள் மறைந்து, மகிமை சூழ்ந்திடுமென்பதை” வெளிப்படுத்தினார்.  இவர்கள்  பெரிய ஞானிகளோ  அறிவாளிகளோ இல்லை.   

கடவுள் படிப்பறிவுள்ள, அந்தஸ்தில் உயர்ந்த, விருந்துகளில் முதலிடத்தை விரும்பும் பரிசேயருக்கோ சதுசேயருக்கோ கடவுள் தன்னை வெளிப்படுத்தவில்லை குழந்தை மன நிலையில் இருந்தவர்களுக்கு  வெளிப்படுத்தினார் என்பது உண்மை. 

 

ஆண்டவரே, என் இறைவனே நாங்கள் குழந்தைகளை போல மாறி விண்ணரசை சுதந்தரித்து கொள்ள வரம் தாரும். உம் அன்பை  ஒவ்வொரு நாளும் அனுபவிக்க அருள் தாரும். அதில் நிலைத்து நிற்க பலம் தாரும். ஆசீர்வதியும். ஆமென்.

 

Add new comment

13 + 3 =