வணக்கமாக

 திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார்.

யோவான் 2-3.

கலிலேயாவில் உள்ள கானாவில் நடைபெற்ற  திருமணத்திற்கு  அன்னை மரியாவும், . இயேசுவும் அவருடைய சீடரும்  சென்றிருந்தனர்.  .  திராட்சை சரம் அவர்களுடைய விருந்தில் மிக முக்கியமானது.

ரசம் தீர்ந்து விட்டது. அன்னை மரியா அங்கு இருந்தார்கள் . அவர்களுடைய தேவையை அறிந்தார்கள்.  இறை இயேசுவிடம் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார்கள். அதற்கு 

இயேசு , “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அந்த இடத்தின் தேவையை அன்னை மரியா அறிந்தார்கள். இயேசுவிடம் பரிந்து பேசினார்கள். இயேசு நேரம் வரவில்லை என்று சொன்ன பிறகும் அன்னை அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார் . 

வெறும் தண்ணீர் 6 கல் தொட்டிகளில் நிரப்பபப்பட்டது.  தண்ணீர் சுவைமிக்க திராட்சை ரசமாக மாறியது.  

அன்னை  நம்முடன் நம் வீட்டில் இருந்தால் போதும்.  நம் தேவையை அறிந்து இறைவனிடம் சொல்லுவார்கள். அவர்களுடைய பிள்ளைகளின் உண்மை தேவை என்ன என அன்னைக்கு தெரியும்.  மரியன்னை கேட்டு விட்டால் மகன் மறுதலிக்க மாட்டார். ஏனெனில் அன்னையும் அவசியமில்லாத ஒன்றை கேட்க மாட்டார்கள்.

அன்னைக்கு வணக்கமாக ஜெபமாலை சொல்லுவோம்.  அவரும் நம் தேவையை அறிந்து தக்க நேரத்தில் நமக்காக பரிந்து பேசுவார். 

 

ஓ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உமது தாயாகிய மரியன்னை யை, எங்களுக்கு உதவி செய்யு தயாராக இருக்கும் தாயாக கொடுத்து இருக்கிறீர். அவருடைய சலுகைகளை தேடுகிற நாங்கள் உமது அருளையும் வரங்களையும் அசீரையும் எங்கள் மரியன்னை  வழியாக பெற்று மகிழ செய்தருளும்.  ஆமென்.

Add new comment

5 + 0 =