முடிவிலிருந்தே தொடக்கம் - புதிய சித்தாந்தம்

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கப்பல்கள் மரத்துண்டுகளால் கட்டப்பட்டன. அப்பொழுது இருந்த தாமஸ் ட்ரோவர்டு என்ற அறிவியல் அறிஞரின் கொஞ்சம் தன்னுடைய சூழமைவைத் தாண்டிச் சிந்தித்தார். தண்ணீரைவிட அடத்திக் குறைவனது எல்லாம் தண்ணீரில் மிதக்கும் என்பதனை அறிவுறுத்தினார் (Anything can float if it’s lighter than the mass of liquid it displaces). எனவேதான் இன்று இரும்பு கப்பல்கள் கடலில்  மிதக்கின்றன.

நம்முடைய சூழமைவு அல்ல, நமக்கு எதுவேண்டுமோ அதில் நம்முடைய கவனம் இருக்கவேண்டும், எது நம்மிடம் இல்லையோ அதைப் பற்றியல்ல. ரைட் சகோதார்கள் யோசித்தார்கள், மனிதன் வானத்தில் பறந்தான். கிரகாம் பெல் சிந்தித்தார், தகவல் தொடர்பு இலகுவானது, தாமஸ் ஆல்வாய் எடிசன் நிதானித்தார், உலகம் ஒளிமையமானது. இவர்கள் இல்லாததைப் பற்றிக் கவலைப்படவில்லை, எதை வேண்டுமோ அவற்றை நினைத்தார்கள். 

பொதுவாக நாம் வாழ்வில் எதாவது வேண்டும் என்றால், இது கிடைக்குமா, இது சாத்தியமா என்று யோசித்து, பின்னர் நாம் செய்யத் துவங்கியதைவிட, நாம் செய்யாமல் விட்டுவிட்டதே அதிகம். இதை அறியாமை என்று பிரபஞ்சத்தின் மபெரும் சக்தியை நம்பியிருக்கும் அறிஞர்கள் கூறுகிறார்கள். 

அதற்கான மாற்றுவழியையும் அவர்கள் செய்துபார்த்து நமக்கு பரிந்துரை செய்கின்றார்கள். அது என்னவென்றால், நாம் எது நடக்கவேண்டும் என்று நினைக்கின்றோமோ அதற்கான சாத்தியக்கூறுகளை நம்முடைய சூழலில் ஆராய்வதைவிட்டுவிட்டு, அதை நாம் செய்யத் தொடங்கவேண்டும் என்று நாம் நினைக்கின்றதிலிருந்து நாம் தொடங்கவேண்டும். தொடக்கத்திலிருந்து முடிவை நோக்கியல்ல, முடிவிலிருந்து முடிவை நோக்கிய பயணம்.

இல்லாதைச் சுட்டிக்காட்டும் சாக்குப்போக்குகளைவிட்டு, இருப்பதிலிருந்து உருவாகும் மபெரும் மனிதர்கள் ஆவோம்.

 

Facebook: http://youtube.com/VeritasTamil

Twitter: http://twitter.com/VeritasTamil

Instagram: http://instagram.com/VeritasTamil

SoundCloud: http://soundcloud.com/VeritasTamil

Website:https://tamil.rvasia.org

**for non-commercial use only**

Add new comment

7 + 10 =