புதிய ஆற்றல்

ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார்.

எசாயா 40-31

நம்மில் பலர் , என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது; என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை” என்று கூறுகிறோம். 

நமக்கு தெரியாதா?  ஆண்டவரே என்றுமுள கடவுள்; அவரே மண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போக மாட்டார். களைப்படையவும் மாட்டார். அவரது அறிவை ஆய்ந்தறிய நம்மால்  இயலாது.

அவர் நம்மை பார்த்து கொண்டிருக்கிறார். நம்மை ஆய்ந்து அறிகிறார்.  அவர் கண்ணுக்கு புலப்படாதது எதுவும் நம்மிடம் இல்லை. 

அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவர்கள் ஊக்கம் அடைய செய்கின்றார். உலர்ந்த எலும்புகளை உயிர் பெற செய்கிறார். 

ஆண்டவரை நம்புவோர் ஆற்றல் பெறுவர். கழுகுகளை போல மேலே எழும்பி பறப்பர்.  அவர்கள் சோர்வடைய மாட்டார்கள். ஆண்டவரின் மகிமையை வாழ்வில் காண்பர். ஆண்டவரின் ஆவி அவர்கள் மீள் நிழலிடும்.

 

ஆண்டவரே, உம்மையே நம்பியுள்ளேன்.  ஆண்டவரே! நீர் எனக்கு இரங்கும்வரை, என் கண்கள் உம்மையே நோக்கியிருக்கும்.ஆண்டவரே! நான் உம்மை நோக்கிக் கூபிடுகிறேன்.  விரைவாய் எனக்குத் துணைசெய்யும். உம்மை நோக்கி நான் வேண்டுதல் செய்யும்போது என் குரலுக்குச் செவிசாய்த்தருளும். ஆமென்.

Add new comment

6 + 9 =