பாதுகாப்பவரே

நான் எகிப்திற்குச் செய்ததையும், கழுகுகளின் இறக்கைகளின் மேல் உங்களை ஏந்தி என்னிடம் வந்து சேரச் செய்ததையும், நீங்களே கண்டீர்கள்.
நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து என் உடன்படிக்கையைக் கடைபிடித்தால் அனைத்துலகும் என் உடைமையேயெனினும், நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள்.
விடுதலைப் பயணம் 19- 4,5 

ஆண்டவர் நம்மை தன்னுடைய தனி சொத்து  என்கிறார். 

அவர் இஸ்ரேல் மக்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டார்.  வழியெல்லாம் மேகத்தூணாக அக்கினி தூணாக இருந்து பாது காத்தார். நாற்பது ஆண்டுகளும் அந்த பாலை நிலத்தில்  அவர்கள் கேட்டது எல்லாம் கொடுத்தார். அவர் மன்னா  கொடுத்தார் . இறைச்சி கொடுத்தார்.  நல்ல சுவையான தண்ணீர் கொடுத்தார்.  உழைக்காமலே உண்டார்கள் . குடித்தார்கள்.  அவர்களுக்கு எதிராக எழும்பிய அமலேக்கியர் போன்றவர்களை முறியடிக்க செய்தார். அவர்களுக்கு பாதைகளை உருவாக்கி கொடுத்தார்.  அவர்களுக்கு அந்த பாலை நிலத்தில் உணவு உடை உறைவிடம் கொடுத்து காத்ததோடு பல சட்டங்களையும்,  நல்ல தலைவர்களையும், சில விழாக்களையும் கூட ஆண்டவரே அமைத்து கொடுத்தார். 

ஆம் ஆண்டவரை நாம் நம்பி அவரிடம் நம்மை முற்றிலும் ஒப்படைத்தால் அவர் நம்முடைய எல்லாவற்றையும் பார்த்து கொள்வார். நம்முடைய உணவு உடை உறைவிடத்தையும் அவரே பார்த்து கொள்வார். நமக்கு எதிராக எழும்பும் பிரச்சனைகளை அவர் கூட இருந்து முறியடிக்க செய்வார். ஒவ்வொரு நாளும், நாம் நம்மையும் நம் குடும்பத்தினரையும், படிப்பு, தொழில், வியாபாரம், வாழ்க்கை, நம்முடைய முன்னெடுப்புகள் எல்லாவற்றையும் அவரிடம் ஒப்படைப்போம்.

ஏனெனில் அவர் நம்மை பார்த்து ,  எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள் என்று கூறுகிறார். 

 

ஆண்டவரே எங்கள் ஆவி ஆத்துமா சரீரம் அனைத்தையும் உம்மிடம் ஒப்பு கொடுக்கிறோம். நீரே உம் தூய மக்களினமாக எங்களை வழி நடத்தும்.   எங்கள் வாழ்வில் எல்லா நேரங்களும் எங்களோடு இரும் . உம் அன்பு பாதையில் நடந்து, நீர் கொடுக்கும் ஆசீரை முழுவதுமாக பெற்று வாழ எங்களை தகுதி உள்ளவர்களாக்கும்.   ஆமென்.

Add new comment

1 + 1 =