Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
பரிசுத்த இறைவனே
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
லூக்கா1-50.
ஆண்டவருக்கு பயப்படுகிறவர்களுக்கு ஆண்டவர் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். நலமானதை செய்வார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துவார். பசித்தோரை நலன்களால் நிரப்புவார்.
இன்னும் எண்ணற்ற ஆசீர்வாதங்களை தருவார். அந்த ஆசீர்வாதங்கள் பரலோகம் வரையிலும் எட்டும். அதற்கு ஆண்டவருக்கு அஞ்சி நாம் வாழ வேண்டும். அவருக்கு பயப்படும் பயம் நம் மனதில் இருக்க வேண்டும். எப்பொழுதும் அவர் கண்கள் நம்மை பார்த்து கொண்டிருக்கிறது . அவர் உள்ளத்தை ஆராய்ந்து அறிகிற கடவுள்.
எனவே நாம் பாவத்தை வெறுக்க வேண்டும் . ஆண்டவருக்கு நம்மை முற்றிலும் ஒப்பு கொடுக்க வேண்டும். ஆண்டவர் நமக்குள்ள எல்லாவற்றையும் பார்த்து கொள்வார் என்னும் விசுவாசம் நமக்குள் இருக்க வேண்டும். உள்ளம் கலங்க கூடாது.
அப்பழுக்கற்றதும், தூய்மையானதும், பரிசுத்தமானதும், குற்றஞ்சாட்டப்பட முடியாததுமான வாழ்க்கையாக நம் வாழ்வு அமைய வேண்டும். புனிதர்கள் இப்படிபட்ட வாழ்வு தான் வாழ்ந்தார்கள். ஆண்டவரோடு நாம் நடந்தால் நம்மோடு அவர் வருவார். நம் கரத்தை பற்றி கொள்வார். நடக்க முடியாத இடத்தில் நம்மை தூக்கி செல்வார்.
ஆண்டவரே ,பரிசுத்த இறைவனே, நீர் பரிசுத்தராக இருப்பது போல் நாங்களும் இருக்க எங்களுக்கு மன வலிமை தாரும். உம் வழியில் நடத்தி செல்லும். உமக்கு பயந்தவர்கள் மீது நீர் பொழியும் ஆசீர்வாதங்களை நாங்கள் பெற்று கொள்ள எங்களை தகுதிவுள்ளவர்களாக்கும். ஆமென்.
Add new comment