நேர்மறையான பார்வை சிகரத்தின் ஊன்றுகோள் - சிகரம், ஒரு மூங்கில் மரம் 15

நாம் சாதிக்க விரும்பினால் நாம் தான் நம்மையே ஒவ்வொரு நிமிடமும் உற்சாகப்படுத்திக்கொள்ளவேண்டும். அதை நம்முடைய வழக்கமாக்கவேண்டும். நம்முடைய நல்ல உணர்வுகளோ கெட்ட உணர்வுகளோ நாம் நமக்குள் சொல்லிக் கொடுப்பவற்றால் தான் நிர்ணயிக்கப்படுகிறது. சாதிக்க விரும்பினால் நாம் நேர்மறையாளர்களாக மாறவேண்டும். நான் கடந்தமுறை தியானம் முடித்துவந்தபோது ஒரு பத்துவயது சிறுமியுடன் பேசிக்கொண்டிருந்தேன். அந்த குழந்தை தான் கருப்பாக இருப்பதால் யாரும் என்னிடம் பேசமாட்டார்கள் என்று தன்னையே பள்ளியில் மற்றவர்களிடமிருந்து விலக்கிவிட்டது. அந்த சிறுமிக்கு எது அழகு என்பதை பகிர்ந்துகொண்டவுடன், மகிழ்ச்சியோடும் கண்ணீரோடும் சென்றாள். ஆக, நாம் எதை நமக்குள்ளே சொல்லிக்கொடுக்கிறோமோ அவ்வாறே நம்முடைய வாழ்வுபாதையும் மாறுகிறது. 

நம்முடைய சுயமதிப்பு உயர்வாக இருப்பது நம் கையில்தான் இருக்கிறது. நாம் நம்மை எவ்வளவு உயர்வாக கருதுகிறோம் என்பதைப் பொருத்துதான் நம்முடைய இலக்கை நோக்கிய பயணத்தின் துரிதம் அமையும். எப்பொழுதும் என்னை எனக்கு பிடிக்கும் என்று நம்மை நமக்கு உயர்ந்த மனிதனாக பிடிக்கும் அளவிற்கு நாம் மாறியிருக்கிறோம் என்று நம்பும்வரை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். 

விக்டர் பிராங்கிள் மனிதனிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துவிடலாம் ஆனால் கொடுக்கப்பட்ட எந்த சூழ்நிலையிலும் எந்த மனப்பான்மையிலும், எந்த பாதையும் தேர்ந்தெடுக்கும்; அவனின் கடைசி சுதந்திரத்தை எடுக்கவேமுடியாது எனக் குறிப்பிடுகிறார். எனவே எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது. எனக்கு அது சரியில்லை, இது சரிவராது என்று புலம்புவதை நிறுத்துங்கள். 

எட் போர்மேன் என்ற பேச்சாளர் இந்த உலகில் வாழ்பவர்களில் 80 சதவீதம்பேர் உங்கள் பிரச்சனைகளைக் கண்டுகொள்வதில்லை, 20 சதவீதம் நமக்கு பிரச்சனை வந்ததை நினைத்து சந்தோசப்படுகிறார்கள் என்கிறார். ஆக, நாம்தான் இதைப் பற்றி நினைத்துக்கொண்டே இருக்கிறோம். 

நேர்மறையாளரின் வாழ்வுமுறை எப்படி இருக்கும்:
1.    எல்லாவற்றிலும் நல்லவற்றைப் பார்ப்பார்கள்.
2.    எல்லாவற்றிலும் நல்ல பாடத்தைக் கற்பார்கள் அது தடைகளாகவும், சிரமமாகவும் இருந்தாலும் (தடைகள் நம்மை தடுக்க அல்ல, மாறாக கற்றுக்கொடுக்க).
3.    தடைகளுக்கு தீர்வைத் தேடுவார்கள் (குறைகூறி, குற்றப்படுத்துவதற்கு பதிலாக, என்ன செய்யலாம் என்று சிந்தித்துச் செயல்பட ஆரம்பிப்பார்கள்).
4.    தங்களுடைய இலக்கைப் பற்றி சிந்திப்பார்கள், பேசுவார்கள் (முன்னோக்கிப் பார்ப்பார்கள்).

 

Add new comment

16 + 3 =