நான் பாவியாய்

உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார்.

லூக்கா 15-20

நம் ஆண்டவர் மனதுருகிற கடவுள். மன்னிப்பின் சிகரம்.  நம் பாவங்களை அவர் நினைவு கூருவாராகில் அவர் முன் ஒருவரும் நிற்க முடியாது.  அப்பா நான் பாவம் செய்து விட்டேனே என்று மனம் வருந்தி மன்னிப்பை நாடினால் ஓடி வந்து நம்மை கட்டி அனைத்து முத்தம் கொடுத்து ஏற்று கொள்ளும் இறைவன். அவரை விட்டு நாம் விலகினாலும் நம்முடைய மாற்றத்துக்காக காத்திருக்கும் தந்தை. 

நம் வருகையை எதி நோக்கி காத்திருப்பார்.   நம்மை  கூர்ந்து கவனிப்பார். . அவருடைய அன்பிற்கு நாம்  தகுதியற்றவர்கள்  என்றாலும், அந்த அன்பு ஒருபோதும் மாறாதது. அன்பைக் குறித்த அக்கறை நமக்கு இல்லாமல்போனாலும், அந்த அன்பு நம்மைவிட்டு நீங்காதது.

வழிதவறின மகன் திரும்பிவந்தபோது தகப்பன் அரவணைத்து ஏற்றுக்கொள்கிறாரோ, அதுபோல நாம் குற்றவாளிகள் என்றாலும்,  நம்மையும் வரவேற்கக் காத்திருக்கிறார்.  என் பாவம் மன்னிக்கபடுமா என நம்மில் பலருக்கு சந்தேகம். அவர் பாவங்களை மன்னியாதவராக இருந்திருந்தால் , யோவான் திருச்சபையின் தலைவராகவும், பவுல் நல்ல திருதூதனாகவும், தாவீது திருப்பாடல்களின் ஆசிரியராகவும், ஆகியிருக்க முடியாது. இன்னும் எத்தனையோ நிகழ்வுகள்.ஆண்டவர் மன்னிக்கும் இறைவன் .  அவர் உன் பாவங்கள் மன்னிக்க பட்டன . இனிமேல் பாவம் செய்யாதே என்று சொல்கிறார். அவரது அன்புக்குரிய பிள்ளைகளாக வாழ்வோம்.  இறை ஆசீரை பெறுவோம். 

 

அன்பு ஆண்டவரே, மாறாத உம் அன்புக்கு நன்றி. என்னை மன்னியும்.  என் குற்றங்களைநீர் நினைவில் வைத்தால் நான் எங்கு செல்வேன் . உம்  அன்புக்கு எப்பொழுதும் தகுதியுள்ள பிள்ளையாக நான் வாழ என்னை வழி நடத்தும்.   இம்மைக்குறிய ஆசீரையும், மறுமைக்குறிய ஆசீரையும் பொழிந்து என்னை காத்து கொள்ளும். ஆமென்.

 

Add new comment

4 + 8 =