நவீன ஊடகங்களைக் கையாளுவது எப்படி - சிகரம், ஒரு மூங்கில் மரம் 17

பொதுவான உயர்வான சில செயல்களைத் தொடர்வதற்கு, மிகவும் தாழ்வான, விரும்பதகாதச் செயல்களை விட்டுவிடவேண்டும். நாம் எப்பொழுதும் எது முக்கியமான வேலை என்று கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். நம்மிடம் இரண்டு வேலைகள் செய்வதற்கு இருக்கிறது என்றால் எது முக்கியமானது என்பதனை அறிந்து தேர்ந்தெடுக்கவேண்டும். ஏனெனில் நவீன தொழில்நுட்பம் மிகவும் எளிதாக நம்முடைய தொடர்புகள், நேரம் மற்றும் உணர்வுகளை அதன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும். எனவே அவற்றில் எது முக்கியம் என்பதை உணர்ந்து பயன்படுத்தவேண்டும்.

அதை எப்படிச் செய்யமுடியும்: 
• நம் வேலைக்கு அப்பொழுது தேவையில்லாத புரோகிராம், நம் கவனத்தை திசைதிருப்பும் அனைத்து இணையதள முகவரிகள் எல்லாவற்றையும் மூடிவிடவேண்டும். நமது வேலைக்குத் தேவையான புரோகிராம் மட்டுமே திறந்திருப்பதை உறுதிசெய்யவேண்டும்.
• நமது அலைபேசியின் அனைத்து அறிவுப்புகளையும் நிறுத்திவைக்கவேண்டும். அப்பொழுது நீங்கள் அதற்கு அடிமையாகாமல் இருப்பது குறைந்துவிடும்.
• ஒருவேளை நீங்கள் குழந்தைகள், முதியவர்களுடன் வேலைசெய்பவர்களாக இருக்கும்போது, உங்கள் சேவை எப்பொழுது வேண்டுமானால் தேவைப்படும் நிர்பந்தத்தில் இருக்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் ஒரு புதிய எண்ணை வைத்துக்கொள்ளலாம். அது மற்றவர்களுக்கு அல்ல, அவசரத் தேவைக்கு மட்டும்.
• உங்கள் இ-மெயில் அனைத்தையும் முதலில் தேவையானது என்ற நிலையில் வகைப்படுத்தலாம்.
• உங்களுடைய காலண்டரில்; உங்கள் பணித்திட்டங்களை பெரிய பத்தியாக குறித்துவைத்தால் மற்றவர்கள் உங்கள் வேலையில் தலையிடமாட்டார்கள். இணையதளம் வழியாக வரும் எந்த அழைப்பிதழையும் உடனே ஏற்றுக்கொள்ளவேண்டாம். 
• நவீனத் தொடர்பு சாதனங்கள் பற்றிய புதியதாகக் கற்றுக்கொள்ளுங்கள். அது மிகவும் முக்கியம். இது எனக்கு தெரியாது, என்னால் கற்றுக்கொள்ளமுடியாது, இது புதிய தலைமுறையினருக்கு உரியது என்று சொல்லாதீர்கள். தெரிந்தவர்கள், நண்பர்கள் வழியாகக் கற்றுக்கொள்ளுங்கள்.
• நவீனத் தொடர்பு சாதனங்களில் உங்களையே ஒவ்வொருநாளும் மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய தொடர் வெற்றிகளை சமூக வலைதளங்களில் இடுகை செய்யுங்கள். இது உங்களுக்கு உந்து சக்தியாக இருக்கலாம். எதையாவது நீங்கள் இடுகை செய்வதற்கு பதிலாக வாழ்வளிக்கக்கூடியதும், உங்கள் இலக்குகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். 

 

Add new comment

2 + 0 =