சிகரம், ஒரு மூங்கில் மரம் 18: கவனச் சிதறலின் ஈர்ப்பு (Attraction of Distraction)

இன்று நவீனத்துவத்தை கவனச்சிதறலின் ஈர்ப்பு என்று அழைக்கிறார்கள். காரணம் அனைவரும் அதனால் ஈர்க்கப்படுகிறார்கள். இதனால் அவர்களின் கவனம் இலக்கிலிருந்து விலகி, வாழ்வில் பின்தங்கி விடுகிறார்கள் என்றே சொல்லவேண்டும். 

நாம் நம்முடைய இலக்கைநோக்கிய வேலைகளின் மத்தியில் நம்முடைய இ-மெயில், சமூகவலைதளச் செய்திகள், அலைபேசி அழைப்புகளுக்கு உடனடியாக பதில் அளிப்பதில் முனைப்போடு இருப்பதால், நமக்கு எளிதாகக் கவனச்சிதறல் ஏற்படுகிறது. நம்முடைய கவனத்தின் நிலைப்புதன்மை குறைந்துவிட்டது என்று ஆய்வுகள் கூறுகிறது. டெலகிராப் என்ற இதழிலில் (மே 15, 2015) லியோன் வாட்சன் எழுதிய கட்டுரையில் நம்முடைய கவனிக்கும் திறன் கோல்டு பிஸ் விட குறைவாகியுள்ளது என்கிறார். கனடாவில் மேக் இவன் பல்கலைக்கழகத்தில் 2000 நபர்களை வைத்து 12 நாட்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவில் கோல்டு பிஸ் 12 நொடிகளும், நாம் 9 நொடிகள்தான் கொண்டுள்ளோம்  எனக் குறிப்பிடுகிறார். 

சில செய்திகள் நம்முடைய ஆர்வத்தைத் தூண்டக்கூடியாதாக இருக்கும். அதைப் பார்க்க சென்று, அதிலிருந்து நாம் வேறொன்றுக்குச் சென்றுவிடுவோம். இன்று நாம் கடைகளுக்கு சென்று பொருள்கள் வாங்குவதைப் போன்றது. 

சிலர் தங்களுக்கு பணிமாற்றத் திறமை உள்ளது என்று கூறுகிறார்கள். அதாவது ஒரு பணியிலிருந்து மற்றொரு பணியையும் ஒரே நேரத்தில் செய்யமுடியும் என்கிறார்கள். ஆனால் அது உண்மையில் ஒரே பணியினைச் செய்வது போன்ற கவனத்தை வேகத்தையும் கொடுக்காது. ஒரு பணியிலிருந்து மற்றொரு பணிக்குச் சென்றுவிட்டால் மீண்டும் அதே பணியினை முழுக்கவனத்துடன் தொடர வேண்டுமென்றால் குறைந்தது 17 நிமிடங்கள் எடுக்கும் என்கிறார்கள். எனவே பணிமாற்றம் என்பது அந்த நாளின் இறுதியில் நாம் எதையும் சாதித்திக்கவில்லை என்ற உணர்வையேக் கொடுக்கும். நாம் செய்த வேலையில் நிறைய குறைகள் இருக்கும். 

•    காலையில் சென்றவுடன் உங்கள் இ-மெயில் பார்க்காதீர்கள். கொஞ்சம் உங்கள் தொடர்புசாதனத்தை நிறுத்திவையுங்கள்.
•    அப்படியே பார்க்கவேண்டும். மிகவும் குறுகிய காலங்களை மட்டுமே பயன்படுத்துங்கள். அதற்கான அழைப்பு சத்தத்தை நிறுத்திவையுங்கள்.
•    ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட இரண்டு நேரங்களில் மட்டும் அதைப் பார்க்கவேண்டும் என முடிவுசெய்யுங்கள். கலையில் 11 மணி, மாலையில் 3 மணி.
•    வீடுகளில் அனைவருடன் இருக்கும்போதும், மற்ற கூட்டங்களில் இருக்கும்போதும் உங்கள் தொடர்புசாதனங்களைப் பயன்படுத்தாதீர்;கள். 

எப்படி வேலைசெய்வது:

•    முதலில் திட்டமிட்டபடி நம்முடைய வேலைகளை முதலில் செய்துமுடிக்கவேண்டும். 
•    தொடர்ந்து 90 நிமிடங்கள் வேலைசெய்யவேண்டும். அதன் பின்பு ஒரு 15 நிமிடம் இடைவெளி கொடுக்கவேண்டும். 
•    அடுத்து தொடர்ந்து 90 நிமிடங்கள் வேலை பார்க்கவேண்டும். அதன் பின்பு சிறிது நேரம் உங்கள் அலைபேசியைப் பார்க்கலாம். இடையில் மொபைலை பார்த்தால் எதையாவது செய்தால் அதனை மீண்டும் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் தேவைப்படும். இவ்வாறு நாம் அதிக நேரம் விரயம் செய்யவேண்டியிருக்கும். 
•    இவ்வாறு காலையில் தொடர்ந்து 3 மணிநேரம் வேலைசெய்யும் பழக்கத்தைப் பழக்கப்படுத்திக்கொண்டால், நம்முடைய உற்பத்தி திறன் அதிகமாகும். உங்கள் வேலையில் திருப்பதி வரும். தொடர்புசாதனங்கள் நம்மை தவறான வழிக்கு எடுத்துச்செல்லாது. 

 

Add new comment

2 + 3 =