குருக்களுக்காக

நான் சந்திப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் புனிதப்படுத்துவேன். எனக்குக் குருத்துவப்பணி புரிய நான் ஆரோனையும் அவன் புதல்வரையும் புனிதப்படுத்துவேன்.

விடுதலைப் பயணம் 29-44.

ஆண்டவர் அவருக்கு குருத்துவ பணி புரியும் அனைவரையும் முதலில் தேர்ந்தெடுத்து அவர்களை  ஆயத்தம் செய்கிறார். அவர்கள் பாவங்கள் எல்லாம் நீக்கி தூய்மை படுத்துகிறார். பின் எண்ணெய் பூசி அபிசேகம் செய்கிறார்.  ஆண்டவர் தூய்மையை விரும்பும் கடவுள். 

ஆரோன் முதல் எல்லா குருக்களையும் அழைத்தவர் அவரே.  எனவே குருக்கள் மூலமாக பேசுபவர் அவரே. இறை இயேசு இறுதி உணவின் போது ஏற்படுத்திய குருத்துவ பணி அவர் விரும்பி ஏற்படுத்தியது.  கிறிஸ்துவின் பிரதிபலிப்பாக  விளங்கும் குருக்கள் கூறும் மறையுறைகள் அவர்கள் தங்கள் சுய ஞானத்தில் சொல்லுவது அல்ல . தூய ஆவியின் வழி நடத்துதல் மூலம் தான் .  

குருக்களின் கரைபடாத தூய வாழ்வுக்காக ஜெபிப்போம்.. அவர்களுடைய தேவைகள் சந்திக்கபட இறைவனை வேண்டுவோம். அவர்களை நமக்கு கொடுத்த அவர்களுடைய பெற்றோருக்காக ஜெபிப்போம். ஆண்டவர் உருவாக்கிய குருத்துவ  பணிக்கான  பணியாளர்கள் இன்னும் பெருக  ஜெபிப்போம்

 

ஆண்டவரே உமக்கு நன்றி.  உம்மால் தெரிந்து கொள்ளப்பட்டு உம் திச்சபையை வழி நடத்தும், எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம் . இவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்ய தூய ஆவியின் அருள் வரங்களை பொழிந்தருளும். இவர்கள் உறவினர்களையும், எங்களையும் ஆசீர்வதியும்.  ஆமென்

Add new comment

3 + 10 =