எம்மை பாதுகாத்திட

உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்; மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும்.

நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார்.

யாக்கோபு5-13, 15

நாம் ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுவோம். அப்பொழுது குணமடைவோம். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.

எலியா நம்மைப் போன்ற எளிமையான மனிதர்தாம். அவர் மழை பெய்யக்கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார்; மூன்று ஆண்டு ஆறு மாதம் மழையில்லாது போயிற்று.

மீண்டும் அவர் இறைவனிடம் வேண்டினார்; உள்ளங்கையளவு மேகம் பெருமழையை கொடுத்தது.  நிலம் விளைந்தது 

ஆண்டவருடைய  பாதத்தில் பாரத்தோடே, உண்மையோடே, கண்ணீரோடே  ஜெபிக்கிற ஜெபங்களுக்கு நிச்சயமாக பதில் கிடைக்கும்.   

ஆண்டவருடைய அருளின்றி உலகில் நாம் வாழ முடியாது  . எலியாவுக்கும் நம்மைப் போலவே பல சோதனைகள், தடைகள், எதிர்ப்புகள் , இடையூறுகள் வந்தன.    எலியா கருத்தாய், விழிப்போடு, ஜெபித்தார். ஆகவேதான் பதிலைப் பெற்றார். 

நாமும் ஊக்கத்தோடு ஜெபிப்போம்.  ஆண்டவர் இரக்கம் உடையவர். தம்மை நோக்கி கூவி அழைக்கிற தன் பிள்ளைகளின் குரலுக்கு மனம் இரங்கும் கடவுள்.  மரண படுக்கைகளை மாற்றுவார். கால்களை மான்கால்கள் போல ஓட பண்ணுவார். உலர்ந்த எலும்புகளுக்கு நிணம் ஊட்டுவார்.  உடலில் செல்களை உயிர் பெற செய்வார்.  நன்றி கூறுவோம்.  புகழ்ப்பாக்களால் துதி பாடுவோம். 

 

மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்!  விண்ணையும் மண்ணையும்  உண்டாக்கிய உம்மிடம் இருந்தே எனக்கு உதவி வரும்..ஆண்டவ ரே எங்களை எல்லாத் தீமையினின்றும் பாதுகாத்தருளும்.  எங்கள் உயிரைக் காத்தருளும். எப்போதும் எங்களோடு இரும்.  ஆமென்.

 

Add new comment

1 + 0 =