எங்கள் சகாயமே

ஒருவர் இயேசுவை நோக்கி, “அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்” என்றார்.

மத்தேயு 12-47

சில சகோதர சகோதரிகள் அன்னை மரியாவுக்கு இயேசுவுக்கு பிறகு பிள்ளைகள் இருந்தனர் என்று கூறுகிறார்கள். அது தவறான கருத்து.

அவர்கள் இயேசுவின் உடன்பிறந்த சகோதரர்கள் அல்ல. ஒன்று விட்ட சகோதரர்கள்.   உண்மையிலேயே இயேசுவின் உடன்பிறந்த சகோதரர்கள் என்றால், உயிரோடு இருக்கும் போது பார்க்க வந்தவர்கள்,  இயேசு சிலுவையில் மரிக்கும் வேளையில் பார்க்க வராமல் இருந்திருப்பார்களா? உடன்பிறந்த சகோதரர்கள் இருந்திருப்பார்களேயானால், யோவானிடம் இயேசு தம் தாயை ஒப்படைத்திருப்பாரா?  அன்று முதல் அவர்  அன்னையை தன்  வீட்டில் ஏற்று கொண்டார் என விவிலியம் கூறுகின்றது. 

ஆண்டவர் இஸ்ரேல் மக்களுக்கு அளித்த  உடன்படிக்கை பேழையை எவ்வளவு அலங்காரத்துடன் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் .  அதை யார் தூக்க வேண்டும். யார் தொடலாம்  என பார்த்து பார்த்து சொன்னார் என்றால் , இயேசு கருவாக தங்கியிருந்த பேழையாகிய அன்னை மரியாவை பாவம் அணுக விட்டு இருப்பாரா?. 

அன்னை மரியாள் பாவ மாசு அணுகாது வாழ்ந்தவர். அருள் நிறைந்தவர்.  அன்னை அமல உற்பவி.   பரிசுத்த ஆவி நிழலிட்ட உடன்படிக்கை பேழை. துயருருவோருக்கு ஆறுதல்.  தன்னை அணுகி வந்து ஜெபிபவர்களுக்கு பரிந்துரை செய்யும் தாய். அன்னையை வேண்டுவோம்.  அருள் வரங்களை மழையாய் பெறுவோம்.

  

நிரந்தர சகாயத்தின் நேச தாயே, மாசணுகாத தேவ தாயே, அம்மா உன்னை தஞ்சம் என நாடி வந்த எங்களின் குரலை கேட்டு எங்களை ஆசீர்வதியும் . உம் மகனிடம் பரிந்துரை பேசும். எங்கள் வேண்டுதல்களை உம் மகனின் விருப்பப்படி பெற்று தாரும் ஆமென்.

Add new comment

2 + 6 =