உன் புகழைப் பாடவே

அனைத்துலகும் உம்மை பணிந்திடுவர்; அவர்கள் உன் புகழ் பாடுவர்; உன் பெயரை புகழ்ந்து பாடிடுவர்
திருப்பாடல் 66: 4.

எல்லா மக்களும் நீரே கடவுள் என்பதை அறிந்து இருப்பார் என்றும் அவர்கள் உம்மைப் அணிந்திருப்பர் உன் புகழ் பாடுவார் என்று இன்றைய இறைவசனம் எங்களுக்கு கூறுகின்றது.

பணிந்திடுவோம் என்றால் இதனுடைய மூல அர்த்தத்தில் மண்டியிட்டு அல்லது தலை முதல் பாதம் வரை சரணாகதியாய் விழுந்து வணங்குதல் என்றும் பொருள்படும் மற்றொரு வகையில் வழிபடுதல் என்றும் பொருள்படும்.

நிறைய இடங்களில் என்னை வழிபடுங்கள் என்று நீர் சொல்லும் பொழுது உன்னுடைய அன்பிற்கு ஆட்பட்டு இருங்கள் எனது அன்பை தெரிந்து கொள்ளுங்கள் அன்பினால் நான் செய்தவற்றை உணர்ந்து கொள்ளுங்கள் அன்பினால் நான் உங்களுக்கு செய்தவற்றை கண்ணோடு கண் நோக்கி பாருங்கள் என்று எங்களை அழைப்பதாக இருக்கின்றது.

இறைவா இன்று நான் உமக்கு பணிவேனாக உண்மை வணங்குவேனாக "என் அன்பே" என்று நீ என்னை அழைப்பதை அறிந்துகொண்டு பதிலுக்கு "என் அன்பு ஆண்டவரே" என்று உம்மை நான் அழைப்பேனாக..

இவ்வாறு என்பொருட்டு நீங்கள் ஆற்றிய வல்ல செயல்களை நானும் என் நண்பர்களும் உறவினர்களும் பார்க்கும்பொழுது அவர்களும் அவர்களின் நண்பர்களும் உறவினர்களும் உம்மை போற்றிப் புகழ்ந்து உமக்கு பணிந்து விடுவார்களாக.

இதோ நான் சொல்ல இருக்கின்ற இந்த மன்றாட்டு என் நாள் முழுவதும் என் நாவில் இருப்பதாக.

அன்பு ஆண்டவரே "என் அன்பே" என்று என்னை அழைத்தவரே உமக்கு நன்றி.

இந்நேரம் வரை எனக்கு உமது அருளை வழங்கிக் கொண்டே இருப்பதனாலேயே உமக்கு நன்றி.

இந்த நாள் முழுவதும் என்னை பாதுகாக்க இருக்கின்ற உம்முடைய விளக்கத்திற்காக நன்றி.

உன் அன்பை புரிந்து கொண்டு உம்மை வணங்கி உனக்கு ஏற்ற பிள்ளையாக இந்த நாளில் நானும் என் குடும்பத்தாரும் உற்றார் உறவினர்களும் நண்பர்களும் வாழ்வோமாக ஆமென்.

Add new comment

1 + 3 =