உணவாகத் தந்தவரே

இஸ்ரயேல் மக்கள், நாற்பது ஆண்டுகளாக, குடியேறவேண்டிய நாட்டினைச் சென்றடையும்வரை, மன்னா உண்டனர். கானான் நாட்டு எல்லைக்குள் புகும்வரை அவர்கள் மன்னா உண்டுவந்தனர்.

விடுதலைப் பயணம்: 16-35

ஆண்டவர் தன் பிள்ளைகளுக்கு உணவளித்து காக்கிற கடவுள்.   

அந்த பாலை நிலத்தில் , உணவு கிடைப்பதற்கு வழியே இல்லாத அந்த இடத்தில்,   தன் மக்களுக்கு மன்னாவையும் காடைகளையும் உணவாக அளித்து காத்தார்

மாலையில் காடைகள் பறந்து வந்து கூடாரங்களை மூடிக்கொண்டன. காலையில் பனிப்படலம் கூடாரத்தைச் சுற்றிப் படிந்திருந்தது .பனிப்படலம் மறைந்தபோது பாலைநிலப்பரப்பின்மேல் மென்மையான, தட்டையான, மெல்லிய உறைபனி போன்ற மன்னா என்ற சிறிய பொருள் காணப்பட்டது.
.மக்கள் தாம் உண்ணும் அளவிற்கேற்பக் காலைதோறும் அதனைச் சேகரித்தார்கள். ஏனெனில் வெயில் ஏறஏற அது உருகிவிடும். அது கெட்டு விடும்.

ஆனால் ஆறாம் நாளில் அப்பத்தை இரட்டிப்பாக, மறு நாளுக்கும் சேர்த்து சேமித்து வந்தனர்.  நாற்றம்வீசவும் இல்லை; புழு வைக்கவும் இல்லை. கெட்டு போகவும் இல்லை.அதே சுவையோடு அப்படியே இருந்தது.

ஆண்டவர் எலியாவுக்கு காகத்தின் மூலம் உணவளித்தார். இயேசு அப்பம் பலுக செய்து உணவளித்தார் என அவர் மக்களை பசியாற்றி வழி நடத்திய இறைவன்.  

ஆண்டவர் இரக்கமுள்ளவர். தன் மக்கள் பட்டினி கிடப்பதை பொறுக்க மாட்டார் . தன்னையே உணவாக கொடுத்து நம்மை மீட்ட அன்பு கடவுள் நமக்கு உணவளித்து பாது காப்பார் . 

ஆண்டவரே உம்மை போற்றுகிறோம். உமது உடலை உணவாகவும் இரத்தத்தையே பானமாகவும் தந்த அன்பு இறைவா, எங்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்றும். நிறைவான அமைதியோடு நாங்கள் வாழ அருள் புரியும். ஆமென்.

Add new comment

1 + 0 =