இவன் வலிமைமிகு முதன்மைப் போர்வீரன்  (ALPHA WARRIOR)

பார்க்கிறவர்கள் நெஞ்சில் தைரியத்தை விதைத்து படைவீரர்களாக மாற்றினான். உனக்குப் பின்னாடி ஆயிரம்பேர் இருக்கிறார்கள் என்ற தைரியம் இருந்தால், ஒரு போர்லதான் ஜெயிக்கமுடியும். அதே ஆயிரம் பேருக்கு நீ முன்னாடி இருக்கிற என்ற தைரியம் வந்துச்சுன்னா நீ உலகத்தையே ஜெயிக்கலாம் என்ற வரிகளை கேஜிஎப் திரைப்படத்தில் இடம்பெற்ற வரிகள். இந்த வரிகள்தான் ஆல்பா வாரியர் என்ற சொல்லிற்கான சரியான அர்த்தத்தைக் கொடுக்கின்றது. 

வாரியர் என்பவன் ஒரு படையிலுள்ள வீரன்னல்ல, அவன் ஒரு போர் வீரன். ஆயிரம் பேரோடு ஒன்றாகச் செல்பவன் அல்ல, ஆனால் ஆயிரம்பேருக்கும் முன்னின்று செல்பவன். வெற்றி பெறும்மட்டும், துணிச்சலோடும் வீரத்தோடும் செல்பவன். அவன் எதற்கும் அஞ்சியதில்லை. உண்மையோடும் நேர்மையாடும் நன்மை செய்வதற்காகப் புறப்பட்டு பயணித்துக்கொண்டிருப்பவன். அவன்தான் வாரியர்.

எல்லா இனத்திற்கும் ஒரு தலைவன் உருவாகிறான். அவனைத்தான் நான்  ஆல்பா வாரியர் என்று அழைக்கின்றேன். இந்த ஆல்பாவின் பிரசன்னமே அந்த கூட்டத்தின் வலிமை. இந்த ஆல்பா கூட்டத்தில் உள்ள படைவீரர்களைப் போர்வீரர்களாக, வாரியர்களாக உருவாக்குகிறான். அவர்களின் தனித்தன்மையை அறிந்து, அதை அவர்கள் பயன்படுத்த உதவிசெய்கின்றான்.     

இவன் உருவாக்கிய வாரியர்கள் ஒவ்வொருவரும் ஆல்பாவாகத் தகுதியுள்ளவர்கள். ஆனால் ஒரு சிலர்மட்டுமே அவ்வாறு உருவாகின்றார்கள். நீங்களும் ஆல்பா வாரியராக மாறலாம். எல்லாருக்கும் வழிநடத்தும் பிரசன்னமாக மாறலாம். அனைத்தும் உங்கள் கையில்தான் உள்ளது. 

Facebook: https://www.facebook.com/VeritasTamil

Youtube: http://youtube.com/VeritasTamil

Twitter: http://twitter.com/VeritasTamil

Instagram: http://instagram.com/VeritasTamil

SoundCloud: http://soundcloud.com/VeritasTamil

Website:https://tamil.rvasia.org

**for non-commercial use only**

Add new comment

3 + 16 =