இறைநம்பிக்கை உணரக்கூடியதா?

இறைநம்பிக்கை எப்படி உணரமுடியும். இறைநம்பிக்கை என்பது ஒரு வானத்தில் விட்டதுபோல இருக்கின்றதே என்கிறார்கள். 

இறைவனை உணர்வது என்பது தெய்வீக உணர்வு. என்னையும் தாண்டி பிறருக்கு, அதுவும் மிகவும் கஸ்டப்படுகிறவர்களுக்கு நீங்கள் உதவிகள் செய்யும்போது, அவர்கள் நம்மிடம் வந்து நீங்க கடவுளா வந்து எங்களுக்கு உதவிசெய்தீர்கள் என்று சொல்கிறபோது உங்கள் உள்ளத்தில் எழும் உணர்வே இறையுணர்வு.

கைவிடப்பட்டவர்களையும், தேவையில் உழல்வோர்களையும் பார்த்தபோது உங்கள் உள்ளத்தில் எழும் அந்த உணர்வும், அந்த உணர்வு அவர்களுக்கு உங்களை உதவ வைக்கும்போது, நீங்கள் இறைவனை உணர்வீர்கள். இந்த செயல்பாடு வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து, உங்கள் வாழ்வாகவே மாறுகின்றபோது நீங்கள் புனிதராகிறீர்கள்.
தொடர்பில் கொடுக்கப்பட்ட காணொளிக்காட்சியின் சுருக்கம். #Veritastamil #rvapastoralcare

Add new comment

3 + 3 =