அவருக்கு உரியதே

உன் நிலத்தின் முதற்கனிகளில் முதன்மையானவற்றை உன் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்துக்குக் கொண்டு செல்வாய். 

விடுதலைப் பயணம் 23-19. 

ஆண்டவர் நம்மை ஆசீர்வதிக்கின்ற கடவுள்.  நம்முடைய உழைப்பின் பயனில் பங்கு  கொடுக்க சொல்கிறார்.  அவர் நமது நொறுங்கிய உள்ளத்தையும், அன்பான மனமுவந்த  காணிக்கையையும் விரும்புகிறார்.   ஆபேல் முதல்,  காணிக்கை செலுத்தப்பட்டு வருகிறது. ஆண்டவர் ஆபேலின் காணிக்கை போன்று எல்லோருடைய மனமுவந்த காணிக்கைகளையும் ஏற்று கொள்கிறார்.  அவர் நமக்கு கொடுத்தது , அதில் நாம் கொஞ்சம் அவருக்கு கொடுத்தால் ஆண்டவர் எவ்வளவு சந்தோசப்படுவார்?!. நாம் கொடுக்கும் காணிக்கைகளை ஆண்டவருடைய இல்லத்தின் செலவுகளுக்கும் , அங்கு பணி புரிவோருக்கும் செலவு செய்யபடுகிறது.  இதைத்தான் விலியத்தில் மலாக்கியில் 'என் இல்லத்தில் உணவு இருக்கும் பொருட்டுப் பத்திலொரு பங்கு முழுவதையும் கொண்டு வந்து அங்கே களஞ்சியத்தில் சேருங்கள். அதன் பிறகு நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, உங்கள் மேல் ததும்பி வழியுமாறு ஆசி வழங்கிறேனா இல்லையா எனப் பாருங்கள்,” என்கிறார் படைகளின் ஆண்டவர்.

இதை தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, "சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்” என்று  கூறினார்.

நாமும் ஆண்டவருக்கு உரியதை அவருக்கு அர்பணிப்போம்.  அவருடைய ஆசீர்வாதத்தை நிறைவாக பெறுவோம்.  

 

அன்பு இறைவா,  என்னிடம் இருப்பதெல்லாம் நீர் எனக்கு இலவசமாக கொடுத்தவை.  ஆண்டவரே என்னை முற்றிலும் உமக்கு ஒப்பு கொடுக்கிறேன். என்னுடைய உழைப்பின் பயனை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.  ஆண்டவரே எங்களுக்கு, கொடுக்கும் உள்ளத்தை தாரும். அதன் மூலமாக இன்னும் அதிகமாக ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள அருள் தாரும் . ஆமென்.

Add new comment

3 + 3 =