அவரது உடனிருப்பு

இன்று அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில் ஆண்டவர் வருவார் நம்மை மீட்பார். காலையில் நீங்கள் அவருடைய மாட்சியை காண்பீர்கள்.
விடுதலைப் பயணம் 16 :6 -7

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் மனம் கேட்டுக் கொண்டே இருப்பது ஆண்டவரின் பிரசன்னம். அவரது உடனிருப்பு.

அது மகிழ்ச்சியைக் கொடுக்கும். பிரெச்சனைகளை மாற்றியமைக்கும். உள்ளத்து விடுதலையை உறுதிபடுத்தும். இனம்புரியாத மகிழ்ச்சியைக் கொணரும். 

இவை எல்லாம் நிகழ வேண்டுமென்றால் நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். எவற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டும்? எப்பேர்பட்டவர் என் ஆண்டவர்! அவரது வல்லமை என்ன? அவரது இரக்கம் தான் என்ன? எனக்காக ஒரு ஆன்மாவுக்காக அவர் எவ்வளவு தூரம் செயலாற்ற கூடியவர்? 
எனக்காக என் மீது கொண்ட அன்பிற்காக என்னவெல்லாம் செய்து இருக்கின்றார்? 
இவற்றை நாம் இன்று அறிந்து கொள்ள வேண்டும். இவற்றை அறிந்து கொள்கின்ற பொழுது நாம் அவருடைய மாட்சியை காண்போம்.

ஆண்டவரே எங்களுக்கு அருள் புரிய உம்மை வேண்டுகின்றோம். நீர் இந்நாள்வரை எங்களுக்கு செய்தவற்றை நாங்கள் அறிந்துகொள்ள அருள் புரியும். நீர் ஒவ்வொரு நாளும் என்னை காண வந்து கொண்டே இருக்கின்றீர் என்பதை நான் அறிந்து கொள்ள செய்யும். நீரே என்னுடைய எல்லா துன்பங்களிலிருந்தும் மீட்க வல்லவர் என்பதை நான் அறிந்து கொள்ளச் செய்யும். இப்பொழுதே என் வாழ்வு, காலைப் பொழுதாக மாறி உம்முடைய மாட்சியை காண்பதாக. ஆமென்!

Add new comment

4 + 5 =