அம்மா மரியே

இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார்.யோவான்பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

யோவான் 19-26, 27

பாவ மாசு அணுகாது அருள் நிறைந்தவளாகிய அன்னை மரியா மீட்பு பயணத்தில் ஆண்டவரோடு நடந்தார். 

பரிசுத்த ஆவியால் கருவாக இயேசு உருவானது முதல் அன்னை எத்தனையோ துன்பங்களை சுமந்தார். அன்னையின் பிரசவ நேரத்தில் ஒரு மாடடையும் கொட்டகை தான் கிடைத்தது. பின்னர் எரோது அரசனிடமிருந்து குழந்தை இயேசுவை பாது காக்க வேண்டி இருந்தது.  வாலிப வயதில் மகனின் இறைபரப்பு பணிக்காக மகனை பிரிய வேண்டி இருந்தது.

சிலுவை தீர்ப்புக்கு பிறகு , இயேசு நடந்த அந்த பாதையில் அன்னையும் நடந்தார்.  இயேசு கீழே விழும்போதெல்லாம் அன்னை எப்படி மனது நொந்திருப்பார்கள். இயேசுவின் மீது விழுந்த அடிகளும், அவர் உடலிலிருந்து விழுந்த ஒவ்வொரு இரத்த துளிகளும், கிழிக்கப்பட்ட தசைகளும் அந்த தாயை எவ்வளவு வேதனை அடைய செய்திருக்கும். 

அனைத்து உலகையும் படைத்த அவர் அந்தரத்தில் சிலுவையில் ஆணி நடுவே தொங்கும் போதும், இறந்த மகனை மடியில் தாங்கிய போதும் அன்னையின் மனநிலை எப்படி இருந்திருக்கும். ஆனால் அன்னை . எந்த இடத்திலும் , ஏன் இப்படி ஆனது. என்னால் முடியவில்லையே என்று மறுத்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. மீட்பு பயணத்தில் துணை நின்றார். 

அன்புக்கு முடிவு கிடையாது. மரணம் கிடையாது.. அந்த மரணப் போராட்டத்திலும், தெய்வமகன் தன்பணியை சாந்தத்தோடு செய்கிறார். தன் மீட்பு திட்டத்தில் தனக்கு துணை நின்ற அன்னையை உலகின் தாயாக ஒப்படைக்கிறார். 

இதோ உன் மகன் என உலகை அன்னையிடம்  ஒப்படைத்தார்.  பயந்து நடுங்கும் அந்த சீடர்களை அன்னையிடம் ஒப்படைத்தார். பாவத்தினால்  சிலுவை மரணத்துக்கு பலியாக்கிய நம்மை ஒப்படைத்தார். அன்னையும் மகிழ்வோடு, பணிவோடு ஏற்று  கொண்டார். இன்று வரையில் செய்து வருகிறார். 

 

இயேசுவே உம் அன்பு பெரிதப்பா . அந்த உயிர் விடும் நேரத்தில் கூட எங்களுக்காக பரிந்து பேச உமது அன்னையை எங்களுக்கு அன்னையாக கொடுத்த உம் இரக்கம் பெரிது.   எங்கள் பாராமுகத்தால் எங்கள் தாய் , தந்தை, உடன்பிறப்புகள், கணவன், மனைவி, பிள்ளைகளை வருத்திய தருணங்களுக்காக மன்னிப்பு கேட்கிறோம் .  எல்லோரையும் ஆசீர்வதிக்க வேண்டுகிறோம் . அம்மா எங்களுக்காக பரிந்து பேசும் . ஆமென்

Add new comment

1 + 8 =