அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA Daily Prayer to God

எங்களை படைத்து பராமரித்து பேணி பாதுகாத்து வழி நடத்தி வரும் எல்லாம் வல்ல பரம்பொருளே இறைவா. எங்களுக்காய் புலர்ந்த இப்புதிய நாளுக்காய் உமக்கு கோடான கோடி நன்றி.

இந்த நாள் மட்டுமாய் எங்களை பராமரித்து பாதுகாத்து தேவைகளை சந்தித்து,  செவ்வனே வழி நடத்தி வந்த உமது மேலான அன்பிற்காய் உமக்கு நன்றி கூறுகிறோம். 

இந்நாள்வரை உமது அன்பை உணர ,சுவைக்க, இன்பத்திலும், துன்பத்திலும் உண்மை பற்றிக் கொண்டு வாழ வரம்  அளித்ததற்காய்   உம்மைப் போற்றுகிறோம் . நீர் என்னேரமும் எமைவிட்டு விலகாமல், எங்களோடு கூடவே இருந்து அனைத்தையும் எதிர் கொள்ளும் ஆற்றலையும், மனவலிமையையும் அளித்து, எங்களை காத்துக்கொண்ட உமது அளவில்லா இரக்கத்தை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். 

உம்மையே  உற்றுநோக்கி, பற்றிக் கொண்டு வாழும் பாக்கியத்தை அருளி, ஒரு போதும் வெட்கி தலைகுனிய விடாமல், பிரகாசமாக ஜொலிக்கும் ஆசீரை எங்கள் மீது தொடர்ந்து பொழிந்து கொண்டு வருவதற்காய் நன்றி நவில்கின்றோம்.

இந்நாளில் நாங்கள் எடுக்கும் முயற்சிகளையும், தொடங்கும் காரியங்களையும் சர்வ வல்லவரான நீர் எங்களோடு இருந்து, இடைபட்ட  காரியங்களை வாய்க்க செய்வீராக. 

உமது அருள் மழையை என் மீது அருவியாக பொழிந்து, நாங்கள் வளமான, பிரகாசமான, செழிப்பான, நலமான வாழ்வு வாழ எம்மை அபரிவிதமாய் ஆசீர்வதியும். 

எங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும், பணியிடங்களிலும் ,செல்லும் இடங்களிலும் நாங்கள்  உமது அன்பு, இரக்கம், மகிழ்ச்சி, அமைதி, கிருபை ஆகியவற்றை சுவைக்கும் வரமருள உம்மை பிரார்த்தித்து,

எம்மையும் எம்மை சார்ந்தவர்களையும் இந்த நன்னாளில் உம்மிடம் சமர்ப்பிக்கிறோம்.

இந்த நாள் இனியநாளாக அனைவருக்கும் அமைவதாக.
 

Add new comment

8 + 1 =