அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA Daily Prayer to God

எங்கள் நன்மையையே நினைவில் கொண்டு, அனைத்து காரியங்களையும் எங்கள் வாழ்வில் அனுமதிக்கும் நன்மை நிறை இறைவா! புலர்ந்த இப்புதிய நாளிற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். புத்துணர்ச்சியையும், புதுத் தெம்பையும், நம்பிக்கையையும், இந்நாளில் எம்மில் மலரச் செய்யும். எம் வாழ்க்கை என்ற படகை செவ்வனே நடத்திட உம் வரம் வேண்டுகிறோம். 

இவ்வுலகில் பயணம் செய்யும் நாங்கள், பல்வேறு பிரச்சனைகளால்,  எதிர்மறை எண்ணங்களால் அலைக்கழிக்கப்படுகிறோம். எமது வாழ்க்கைப் படகில், இன்று எம்மோடு இணைந்து பயணம் செய்து, எம்மை உமது  பிரசன்னத்தால், மன அமைதியால் நிரப்பி, உம்மீதுள்ள எம் விசுவாசத்தை பலப்படுத்தும். புயலெனும் மனச்சோர்வால், ஏமாற்றத்தால், நாங்கள் நம்பிக்கை இழந்து, எமது வாழ்க்கைப் படகு மூழ்கி விடாமல் எமை காக்கும் நங்கூரமாக இருக்குமாறு உம்மிடம், எமது வாழ்வை, முழுமையாக அர்ப்பணிக்கிறோம். எம்மை பொறுப்பெடுத்து, நல் வழி நடத்தி, நன்மைக்கு ஏதுவாக வேண்டிய அனைத்தையும் செய்வீர் என்ற நம்பிக் கையோடு வாழ வரம் அருளும். 

முடிவுகள் மற்றும் நிகழ்வுகள் எதுவாயினும், காரணமின்றி எதையும் எம் வாழ்வில், நீர் ஒரு போதும் அனுமதிக்க மாட்டீர் என்பதை நன்கு உணர்ந்து, உமது கரம் பற்றிக் கொண்டு, இந்நாளை துவங்கும் எம்மை, நிறைவாய் ஆசீர்வதிக்க வேண்டி, எம்மை உம்மிடம் சமர்ப்பிக்கிறோம். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

Add new comment

4 + 3 =