அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA Daily Prayer to God

எங்கள் மீது மாறாத நேசம் கொண்டு, தாய் போல தேற்றி அரவணைத்து, தந்தை போல ஆற்றி கரம்பிடித்து, எங்களை ஒவ்வொரு நாளும் நல்வழி  நடத்திவரும் அன்பின் தெய்வமே இறைவா! உமது பேரன்பின் வெளிப்பாடாக, இரவு முழுவதும் எங்களை காத்து,மீண்டும் ஒரு புதிய நாளை கொடுத்ததற்காக,சிரம் தாழ்த்தி எமது நன்றியை உமக்கு செலுத்துகிறோம். 

நீவீர் நேற்றைய தினத்தில் எமக்கு செய்த சகல விதமான நன்மை தளங்களையும், எம்மீது பொழிந்த ஆசீர்வாதங்களையும் நினைத்து, உண்மை புகழ்கிறோம்.  

எவ்வாறு இரவு காவல்காரன் அதிகாலை உதயமாவதை ஆர்வமுடன் எதிர்நோக்கி இருக்கிறானோ, அவ்வாறே, இப்புதிய நாளில், நாங்கள் உம்மை நோக்கி பார்க்கின்றோம். ஏனெனில் எமக்கு உதவி, அடைக்கலம், மகிழ்ச்சி, அருள், ஆசீர்வாதம், நற் செயல்கள் அனைத்தையும் எமக்கென வழங்க இருப்பவர் நீர் ஒருவர் மட்டுமே. எமது எண்ணம் அறிந்து, எமது தேவைகளை சந்தித்து நிறைவேற்றும் மனமும், வல்லமையும் கொண்ட உமது பொற்பாதம் எங்களை முழுவதும் இந்நாளில் ஒப்படைக்கிறோம். 

எங்களை பொறுப்பெடுத்து, ஒவ்வொரு நொடிப்பொழுதும் உமது கடைக்கண் பார்வைக்கு உள்ளாக எங்களை வைத்து, கண்ணை இமை காப்பது போல ,உமது கண்மணியான எம்மை பராமரித்து காத்துக் கொள்ளுமாறு உம்மிடம் பிரார்த்தித்து இப்புதிய நாளை துவங்குகிறோம். 

மாறாத நேசரே எம்மை  ஆசீர்வதியும். அருள் புரியும்.  இந்நாள் நன்னாளாக  நம் அனைவருக்கும் அமைவதாக.

Comments

I feeling blessed with daily prayer it gives me immence plesure and eliminate negative thoughts.

Add new comment

11 + 0 =