அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA Daily Prayer to God

ஆண்டவரே இரவு முழுவதும் எங்களோடு இருந்து இந்த நாளை நாங்கள் காண செய்ததற்காக நன்றி. ஆண்டவரே இன்றைய நாள் முழுவதும் எங்களோடு கூட இரும். அச்சமூட்டும் பாவங்கள் அசரவைக்கும் ஊடகங்கள் இவற்றை துச்சமென்று நாங்கள் கடக்க தூயவர் நீர் துணையாக வாரும். விந்தையான உலகம் நிந்தனை செய்யும் மானிடம் நாங்கள் சிந்தை தவறாது வாழ விண்ணவர் உம் வரம் தாரும். வேதனை தரும் சம்பவங்கள் சோதனையான நிகழ்வுகள் இவற்றை தாண்டி சாதனை புரிய சக்தி தாரும் ஆண்டவரே.

வான் மழையும் பொய்த்து போச்சு பூமியெங்கும் வறண்டு போச்சு சாபம் நீங்கி சம்பூர்ண மழை பெற மாபரனே வாரும். மானிட மனங்களை உம் சமாதானத்தால் நிரப்பும். நன்றி ஆண்டவரே செபத்தை கேட்டதற்காய் நன்றி, பதில் கொடுத்ததற்காக நன்றி, நல்லவரே நன்றி, ஆமென்.

Add new comment

6 + 5 =