Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA Daily Prayer to God
Monday, July 01, 2019
அதிகாலை துளிகளில்
அன்பருக்காய்
அழகான சோலைக்குள்
காத்திருந்தேன்.
அங்கு ஆடும் மயிலைப் பார்த்தேன்.
ஆண்டவா
உன் அழகை கண்டேன்
பாடும் குயிலை பார்த்தேன்
பரமனே பரவசம் ஆனேன்.
ஓடும் நதியை பார்த்தேன்
உன்னதரே உன் கலைநயம் கண்டேன்.
பறவைகள் கூட்டத்தைக் கண்டேன்
பரமனே உன் படைப்பை கண்டேன்.
கரைதாண்ட கடலலை கண்டேன்
கடவுளே உன் கைவண்ணம் கண்டேன்
தீண்டிச் சென்ற தென்றலை உணர்ந்தேன்
தேவனே உன் கருணை கண்டேன்.
உடலுக்குள் என் உறுப்புகளை நினைத்தேன்
உத்தமனே உண்மையிலே திகைத்தேன்.
ஓ இறைவா நீ எங்கோ இல்லை
என்னை சுற்றிலும் எல்லாமாக இருக்கிறாய்.
நன்றி ஆண்டவரே. எல்லாவற்றுக்கும் நன்றி. இத்தனை கவனத்துடன் உலகைப் படைத்த நீ என்னையும் வழி நடத்துவாய் என நம்புகிறேன். ஆண்டவரே உம் பிரசன்னத்தால் என்னை நிரப்பும். ஆமென்.
Click to share
Add new comment