அன்பருடன் அதிகாலைத்துளிகள் - Prayer to God

எங்களை வாழவைக்கும் நல்ல தெய்வமே! இந்த அருமையான காலை பொழுதுக்காய்,  இந்த புதிய நாளுக்காய் நன்றி கூறுகிறோம். 

எங்களது உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஆரோக்கியமாக இயங்க வைத்துக் கொண்டு இருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். 

எங்களுக்கு வாழ்வாகவும் வழியாகவும் எங்கள் பாதைக்கு ஒளியாகவும் நீர் விளங்குவதற்காக நன்றி கூறுகிறோம். 

எங்கள் வாழ்க்கை நீர்க்குமிழி போன்று நிலையற்றது என்பதை  தெளிவாக உணர்ந்து உண்மைப்பற்றிக் கொண்டு வாழ எமக்கு  வரம் அருளும். 

இன்று எங்களை செவ்வையான, நேரிய, உமக்குப் பிரியமான பாதையில் நடத்தியருளும். 

உமக்குகந்த காரியங்களில் நாங்கள் ஈடுபட,  நல்ல விழுமியங்களை இன்றைய நாளில் வாழ்வாக்க எங்களுக்கு உதவியருளும். நீர் எங்களோடு பயணித்து எங்களுக்கு ஆலோசனை நல்கி, பண்பான, அன்பான, பிறர் பயன்பெறும் வண்ணம் எங்கள் வாழ்வு அமைய எங்கள் கரம்பிடித்து நல் வழிப்படுத்தும். நீர்க்குமிழி போன்ற எங்கள் நிலையற்ற வாழ்வை உமக்கு சமர்ப்பிக்கிறோம். இவற்றை நீர் பொறுப்பேற்று  நிலைவாழ்வு நோக்கி நாங்கள் இன்று பயணிக்க அருள்புரிவீராக.  

இன்றைய நாள் இனிய நாளாக அமைவதாக. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

Add new comment

2 + 1 =