90s கிட்ஸ் ஆகா மாறும் 2k கிட்ஸ்

ஆடு புலி ஆட்டம்

ஆடு புலி ஆட்டம் என்பது ஒரு தமிழர் திண்ணை வியூக விளையாட்டு ஆகும் இந்தியா உட்பட தெற்காசிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இவ்வாட்டம் விளையாடப்படுகிறது. பல இந்திய மொழிகளில் ஆடுபுலி என் பெயரை மொழிபெயர்த்து இந்த விளையாட்டிற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த விளையாட்டை வெட்டும்புலி ஆட்டம்,  குழை எடு ஆட்டம்  எனவும் கூறலாம். இந்த விளையாட்டை வெட்டும்புலி ஆட்டம்,  குழை எடு ஆட்டம்  எனவும் கூறலாம்.இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுகிறது. ஊர்ப்புறங்களில் தரையில்,பாறை அல்லது திண்ணையில் இந்த கட்டங்களை  சுண்ணாம்புக் கட்டி அல்லது ஜாக் பயன்படுத்தி வரைந்து கொள்வார்கள் புளியங்கொட்டை கற்கள் மணிகள் மற்றும் சிறப்பாக தயாரிக்கப்பட்ட காய்களை அதில் நகர்த்தி விளையாடுவார்கள் இது ஒரு மதிநுட்ப உத்தி விளையாட்டு. சங்கப்பாடல் இதனை  ‘வங்கா வரிப்பாறை ‘என்று குறிப்பிடுகிறது.இது சிறு பாடு விளையாட்டு என்பது தமிழர் கொள்கை.

பயன்கள்:

இந்த விளையாட்டை பொறுத்தவரை 15 ஆடுகளுக்கு ஒரு வித காயும் 3 புலிகளுக்கு ஒருவித காயும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது 3 புலிகள் இருந்தாலும் 15 ஆடுகள் ஒரு குழுவாக ஒன்று கூடினால் புலி போன்ற வலிமை மிக்க விலங்குகளிடம் இருந்தும் தப்ப முடியும் என்பதை இந்த விளையாட்டின் மூலம் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமூக ஒற்றுமையின் மாதிரி வடிவத்தை அடிப்படையாக கொண்டு இந்த பாரம்பரிய விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற  பழமொழிக்கேற்ப நம்  குடும்பங்களிலும் ஒற்றுமையோடு வாழ்ந்தால் நமது வாழ்வு சந்தோசமாகவும் வளமாகவும் இருக்கும்

 ஆகவே, இதுபோல்  நம்முடைய பல பாரம்பரிய விளையாட்டுகளை நாம் அடுத்த பகுதியில் பார்ப்போம் இந்த  பல  தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி நாம் குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம்.

 

 

 

 

 

 

 

 

Add new comment

12 + 2 =