90's கிட்ஸ் ஆகா மாறும் 2k கிட்ஸ்

இப்போ உள்ள காலகட்டத்தில் நம்ம குழந்தைகள்  விளையாடுவதே அதிசயம்! எப்போ பார்த்தாலும்  மொபைல் ,கணினி மற்றும் சமூக ஊடகங்களில்  தன முழ்கியிருக்கிறோம். அத நம்ம குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து, அவர்களும்  அதிலேயே தான் விளையாடுறாங்க  பயன்படுத்துறாங்க . ஏன் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவது கூட அந்த மொபைலில் வச்சுதான் நம்ம சாப்பாடு கொடுக்கிறோம் குழந்தைகளும் அதை பார்த்து தான் வளர்ந்து வராங்க.  அதனால நிறைய பிரச்சனைகளும் வருது குடும்பத்திலும் சரி சமூகத்திலும் சரி. ஆனா இப்போ இந்த நிலை கொஞ்சமா மாறிட்டு வருது. நம்ம இந்தியாவில  முழு ஊரடங்கு  இருக்கிறதால. வீட்டில் குடும்பத்தோடு அமர்ந்து நமது பாரம்பரிய விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். விளையாட்டினால் 2k கிட்ஸ் 90s கிட்ஸ் ஆக மாறிக் கொண்டிருக்கிறார்கள். . அப்படி என்ன விளையாட்டு விளையாடுகிறார்கள்?. வாங்க பார்ப்போம்! 

தாயம்

தாயம் எனப்படுவது பண்டைய காலத்திலிருந்து இன்று வரை இந்தியாவில் பரவலாக ஆடப்படும் ஒரு விளையாட்டாகும்.  இந்த விளையாட்டை இரண்டிலிருந்து நான்கு பேர் வரை விளையாடலாம் .இந்த விளையாட்டை விளையாடுவதற்கு சோழிகள் அல்லது தாயக்கட்டைகளையும் பயன்படுத்தலாம்.இதை சூதாட்டம் ,சொக்கட்டான், சோழி விளையாட்டு என்று பல வகைகளில் அழைக்கலாம். இதை தரையிலும் மேடை மீதும் வைத்து விளையாடலாம்.

தாயக் கட்டை விளையாட்டில் யார் முதலில் தாயம் போட்டு விளையாட்டை துவக்குகிறார்கள் என்பதே சுவாரஸ்யம்தான். பல நேரங்களில் ஒரு மணி நேரம் போராடியும் தாயம் விழாமல், இடத்தை மாற்றி ஆளை மாற்றியெல்லாம் தாயம் விழவைக்க முயற்சி செய்வார்கள். கொரோனா ஊரடங்கின்போது பலர் இதை விட சுவாரசியமாக பல மணி நேரம் தாயக்கட்டை விளையாட்டில் பொழுதை போக்குகின்றனர்.

பொதுவாகவே தாயக்கட்டை போன்ற விளையாட்டுகள் விளையாடும்போது பலருக்கு தங்கள் நேரம் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு புரியும். பல விதமான கட்டங்கள் வரைந்து, புளியங்கொட்டைகள் பயன்படுத்தி விளையாடும் தாயமாக இருந்தாலும் சரி, பரமபதம் போன்ற விளையாட்டாக இருந்தாலும் சரி, எப்போது சறுக்கி விழுவோம், எப்போது தோல்வி நம்மை நோக்கி வரும் என்பதை கணிக்கவே முடியாது.

பயன்கள்:

ஆனாலும் தோல்வியை ஏற்றுக்கொண்டு மீண்டும் முதலில் இருந்து விளையாட துவங்குவோம். அதுவே வாழ்க்கையிலும் பின்பற்றபட வேண்டும் என்பதே இவ்வகையான பாரம்பரிய விளையாட்டுகளில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய சில நன்மைகள்.

இந்த விளையாட்டை இப்போதுள்ள நவீன தொழிநுட்ப வளர்ச்சியால் ,ஒரு சில பாரம்பரிய விளையாட்டுகள் 90ஸ் கிட்ஸுக்கு தெரிந்திருந்தாலும், இன்று பலருடன் இணைந்து ஆன்லைனில் லுடோ விளையாடி மகிழ்வது 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என அனைவரும்தான்.

இதை பண்டைய காலத்தில் பாண்டவர்கள் சொக்கட்டான் என்ற பெயரில் விளையாடி தமது அரசு உடமையையும்  அனைத்தையும் இழந்ததால் மகாபாரத போர் உருவானது.

ஆகவே, இதுபோல்  நம்முடைய பல பாரம்பரிய விளையாட்டுகளை நாம் அடுத்த பகுதியில் பார்ப்போம் இந்த  பல  தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி நாம் குடும்பத்துடன் ஆனந்தமாக இருப்போம்.

 

Add new comment

1 + 4 =