லூசியான் போட்டோவாசோ - Blessed Lucien Botovasoa - October 17, 2019

1908 இல் ஓஹிபெனோ என்கின்ற மடகாஸ்கர் நாட்டு சிறிய ஊரில் பிறந்தார். இவருடைய பெற்றோர் விவசாயம் பார்க்கும் ஏழைகள். இந்த ஊர் முழுவதுமே இவ்வாறாகவே இருந்தது. பருவநிலை மாற்றங்களால் அவர்களுடைய  விவசாயம் அவ்வப்போது பாதிப்புக்கு உள்ளானது. அவர்கள் எல்லோருமே தங்களுடைய கலாச்சாரத்தை வழிபட்டு கொண்டிருந்தாலும் திறந்த மனம் உடையவர்களாக இருந்தார்கள். கிறிஸ்தவம் இவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது எல்லோருமே மனம்மாறி திருமுழுக்கு பெற்றுக்கொண்டார்கள் அவர்களும் லூசியனும்  ஒருவர்.

இவர் 1922 ஏப்ரல் 15 தூய சனிக்கிழமையன்று தன்னுடைய 13 ஆவது வயதிலேயே திருமுழுக்கை ஏற்றுக்கொண்டார். அதற்குப் பின்னரே இவருடைய பெற்றோர் கிறிஸ்துவத்தை ஏற்றுக் கொண்டனர். 1923 ஏப்ரல் 2 இல் இவர் உறுதிப்பூசுதல் பெற்றுக்கொண்டார். இவருடைய வாழ்க்கையை சுருங்கக் கூறினால் நல்ல கிறிஸ்தவன்.

இயேசுவின் அப்போஸ்தலன் இந்த உலகத்தில்

இவருடைய மறை  சாட்சியத்திற்கு என்ன சொல்லலாம் என்றால் குடிமக்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பும் தன்னை துன்புறுத்துவோர்  மீது அவர் கொண்டிருந்த அன்பும். சேசு சபை குருக்களின் வழிகாட்டுதலின் பெயரில், நான்கு ஆண்டுகள் படிப்பை முடித்து ஓர் ஆசிரியராக தன்னுடைய சொந்த ஊருக்கு வருகிறார். இவர் கல்விப்பணியில் சிறந்து விளங்கினார். திறமையும், புலமையும் பெற்றிருந்தார். பிள்ளைகளுக்கு பொறுமையாக, நிதானமாக, தெளிவுற, அழகாக எல்லா பாடங்களையும் கற்றுக் கொடுத்தார்.

இவர் கல்வி பணியோடு சமய மறைக்கல்வி பணியும் ஆற்றுவதில் பேரார்வம் கொண்டிருந்தார். பள்ளி நேரத்திலும் பள்ளியை தாண்டிய நேரத்தில் இவர் மறைக்  கல்வியை போதித்து கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் பள்ளி நேரம் முடிந்த பின்பு புனிதர்களுடைய வாழ்க்கை வரலாறை அவர்கள் விருப்பத்திற்கேற்ப வாசித்துக் காட்டினார். அவருடைய வாசிப்பு எப்படி இருந்தது என்றால், இதனை கேட்பவர்களுக்கு உள்ளத்திலே ஓர் தீ பற்றி எரிவது போன்று இருந்தது.

அவ்வளவு அழகாக நேர்த்தியாக வாசித்துக் காட்டினார். 1930 அக்டோபர் 10ல்  சூஜென்னெ ஸௌஜனா  என்பவரை மணந்தார். இந்த தம்பதியருக்கு 8 பிள்ளைகள் பிறந்தாலும் ஐவர் மட்டுமே பிழைத்திருந்தனர். இவர் பிள்ளைகளை அன்பு செய்தார், கற்பித்தார், ஜெபிக்கவும் கற்றுக்கொடுத்தார். இவர் மற்ற பிள்ளைகளையும் அன்பு செய்தார். கரிசனையோடு அரவணைத்தார். நோயாளிகளை சந்தித்தார். மாலை வேளைகளிலும் பல்வேறு குழுக்களையும் நேர்த்தியாக வழிநடத்தி கத்தோலிக்கத்தில் ஒவ்வொரு நாளுமே வளர்த்துக்  கொண்டிருந்தார்.

இவருடைய மனைவி இவரை ஆசிரியர் பணியை விட்டுவிட்டு ஓர் கணக்காளராக மாறு மாறு கேட்டுக் கொண்டிருந்தார். ஆயினும் இவர் அதனை பொருட்படுத்தாது கடவுளாக நிறைய பணிகளை செய்து கொண்டிருந்தார். தினந்தோறும் திருப்பலிக்கு  செல்லுவது, காலை 6 மணிக்கே திருப்பதிக்கு செல்லுவது, புதன் கிழமைகளிலும் வெள்ளி க் கிழமைகளிலும் இன்னும் அதிகமாக திருப்பலியில் பங்கு எடுப்பது, எல்லா நாளும் இசைக்கருவிகளை மீட்டு திருப்பலியில் பங்கேற்பது, என்று எல்லா வகையிலும் முன்மாதிரியாய் இருந்தார்.

1940 இல் இவளுக்கு ஒரு புத்தகம் கிடைத்தது அது பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை பற்றியது. அதில் திருமணமாணவர்களும் இணைந்து  இருக்க, பணியாற்ற முடியும். இதில் இருந்தது அதற்கு இறுதி ஒப்புதல் பெற்று அந்த சபையையும் நிறுவினார். வாரத்துக்கு இரண்டு நாட்கள் நோன்பு இருந்து வந்தார். இது அவருடைய மனைவிக்கு பிடிக்கவில்லை. 1945 அக்டோபரில் மற்றும் 1946 ஜூன் மாதத்தில் 2 தேர்தல்கள் வந்தன. அதிலே இரு அமைப்புகள் இவரை தங்களது பிரதிநிதிகளாக நிறுத்த முன் வந்தன. ஆனால் அவற்றை அவர் நிராகரித்துவிட்டார்.

நீங்கள் பொய்யர்கள். உங்களோடு சேர்ந்து நான் பணியாற்ற இயலாது என்று அதனை ஒதுக்கி விட்டார். 1947 மார்ச் 30ஆம் நாள் என்று இவரின் தந்தை இவரை காட்டுக்கு அனுப்பி விட்டார் ஏனென்றால் அது குருத்தோலை ஞாயிறு ஆக இருந்தது அப்போது அங்கே பெரிய அசம்பாவிதம் நடந்தது. ஓர் கொள்கை உடைய குழு இறங்கி எல்லா  ஆலயங்களையும், மக்களையும் கொன்று குவித்தது. அந்த நேரத்திலே ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாட முடியாத சூழ்நிலை உருவானது.

இந்த நேரத்திலே இவர் முஸ்லிம்கள், பிரிவினையை சகோதரர்கள், கத்தோலிக்கர்களை ஒன்றுகூட்டி ஜெப வழிபாடு நடத்தி அதில் வெற்றியும் கண்டார். ஓர் அமைதியின் தூதனாய் செயல்பட்டார். 1947 ஏப்ரல் 16 ஓர் அதிகாரி இவரை அந்த நாட்டு உள்ளாட்சி மறுமலர்ச்சி இயக்கத்திற்கு துணை வருமாறு அழைத்தார். அதிலே முக்கிய பொறுப்பாக செயலர் பொறுப்பை தருவதாகவும் கூறினார். இந்த அமைப்பு கிறிஸ்தவத்தை எதிர்க்கின்ற அமைப்பு.

எனவே இவர் அங்கு சென்று எனக்கு இது வேண்டாம் என்று சொல்ல, இவரை அவர்கள் கொல்வதற்காக இழுத்துச் செல்கிறார்கள். இவரோடு சேர்ந்து இவருடைய மாணவர்களும் அங்கே கூடியிருந்தார்கள். அங்கே அழுதுகொண்டிருந்தார்கள் அவர்களிடம்  என் குடும்பத்திற்கு அழவேண்டாம் என்று சொல்லுங்கள் என்றார். மகிழ்ச்சியாக கடவுளோடு செல்கின்றேன் என்று சொல்லியதாக நாம் வாசிக்கின்றோம்.

அங்கே ஓர் கால்வாய் இருக்கின்றது. அந்தக் கால்வாயை தாண்டித்தான் அவருடைய தலையை துண்டிக்க வேண்டிய இடம் இருந்தது. அந்த கால்வாய்க்கு முன்பாகவே இவர் நான் ஜெபிக்க வேண்டும் என்று மண்டியிட்டு ஜெபித்தார். நீண்ட ஜெபங்களை செபித்தார். அவர் இவ்வாறாக வேண்டியதை  நாம் வாசிக்கின்றோம் 'என் கடவுளே, என் சகோதரர்களை மன்னியும், அவர்கள் சந்திக்க இருக்கின்ற கடினமான முகத்தையும் மன்னியும்.  என்னுடைய ரத்தம் என் நாட்டிற்கு மீட்பை கொண்டுவருவதாக' என்று ஜெபித்தார்.

மேலும் இந்த வரிகளை  அடிக்கடி அவர் சொல்லிக் கொண்டிருந்தாராம். ஓ கடவுளே! காப்பாற்றுங்கள், உன் மக்களை, உம்முடைய கோபம் இவர்கள் மீது இராதபடி என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாராம். கொலை செய்யப்பட வேண்டிய நேரம் வந்தபோது கைகளை கட்டி இருக்கிறார்கள் அப்பொழுது என் கைகளை காட்டாதீர்கள் என்று தானே இரு கைகளை மடக்கி ஜெப மாலையை வைத்து தன் கைகளை கட்டிக் கொண்டாராம்.

இறப்பதற்கு  எந்நேரமும் தயார் என்று சொல்லி நீண்ட ஜெபங்களை சொல்லிக்கொண்டிருந்தார். காண்கின்ற எல்லோருமே ஏன் இத்தனை மன்றாட்டுகளை  செய்து கொண்டிருக்கின்றாய்? இந்த ஜெபங்கள் உன்னை காப்பாற்றும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? இல்லை .இல்லை. என்று ஏளனம் செய்து கொண்டிருந்தார்கள்? அதையெல்லாம் அவர் பொருட்படுத்தாது தொடர்ந்து ஜெபித்துக் கொண்டே இருந்தார்.

இப்போது நான் தயார் என்று சொல்லி, மூன்று முறை கரங்களை விரித்து மேலும் கீழும் விண்ணுலகை நோக்கி தாழ்ந்து குப்புற விழுந்து இயேசுகிறிஸ்து செய்ததைப் போலவே பாடுகளில் பங்கேற்பதை போன்ற இவர் சென்று தன் உயிரைக் கொடுத்தார் என்று நாம் வாசிக்கின்றோம். அந்த நேரத்திலே அவரை ஏளனம் செய்தவர்கள் இவ்வாறாக சொன்னார்களாம் இப்பொழுது நீ உன்னுடைய இசை பெட்டியை வாசி  சொன்னார்களாம்.

அவருடைய உடல் அங்கேயே இருக்கின்ற  மடிடனன  ஆற்றிலே வீசப்பட்டது. இவருடைய நம்பிக்கையையும் மறைசாட்சி வாழ்வையும் பார்த்து திருஅவை  இவரை 2018 ஏப்ரல் 15  அருளாளர் ஆக பிரகடனப்படுத்தியது. 

நாம் என்ன செய்யலாம்?

Add new comment

3 + 11 =