சிப்ரியன் மைக்கேல் இவான் டான்சி

அருளாளர் சிப்ரியன் மைக்கேல் இவான் டான்சி இன்றைய   இளையோருக்கும் பெண்களுக்கும் தேவையான ஒரு புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட கூடிய நபர். பிறப்பு: 1903; ஊர்: தெற்கு நைஜீரியாவில் அகுலேரி நகருக்கு அருகில் இக்போயேஜுனு என்னும் இடம்; இறப்பு: 1964 ஜனவரி 20; அருளாளர்: புனித பாப்பரசர் இரண்டாம் ஜான்பால் அவர்களால் 1998 மார்ச் 22 ல் திருச்சபையால் அருளாளர் ஆக உயர்த்தப்பட்டார்.

வரலாறு: வேற்று நம்பிக்கை கொண்ட பெற்றோருக்குப் பிறந்து படிப்பிற்காக உறவினர் வீட்டிற்கு சென்று அங்கு ஆறு வயதில் கிறிஸ்தவம் அறிமுகமாகி 9 வயதில் திருமுழுக்குப் பெற்று 22 வயதில் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக உயரும்  நிலையில் குருவானவராக அழைத்தலை உள்ளுக்குள் உள்ளார்ந்து உணர்ந்து 1937 டிசம்பர் 19 குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். இவரே அங்கிருந்து உருவாகி குரு வானவர்களும் முதன்மையானவர்.

இறைவனை பலமாக கொண்டதால் இவர் செய்த நற்செய்தி பணிகள்:

1. மக்கள் வந்து கடவுளை சந்திக்க ஆலயங்கள் தங்குமிடங்கள் கட்டியது

2. பெண்கள் தங்களின் மாண்பு என்ன என்பதை ஏற்று தங்கள் கற்பு வாழ்வு மேன்மையை உணர்ந்து நல்ல இல்லறம் அமைக்க அறநெறி படுத்தியது

3. இளையோருக்கு முன்மாதிரியாய் இருந்து இறையழைத்தலை விதைத்தது

4. ஒவ்வாத மூடநம்பிக்கைகளை தானே முன்னின்று இறைவனின் அருளால் அது பொய் என்று நிரூபித்தது

நாம் என்ன செய்யலாம்?

Add new comment

8 + 1 =